புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 நவ., 2012

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரிதி அவர்கள் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவு.
பிரான்ஸ் தலைநகர் பரிசில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரிதி  அவர்கள் தேசவிரோதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவடைந்துள்ளார்.  இன்று மாலை பரிசில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலகம் முன்பாக இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. 
1996 ஒக்ரோபர் மாதம் 26ஆம் நாளன்று பாரிஸ் லாச்சப்பலில் இடம்பெற்ற நாதன் கஜன் ஆகியோரின் படுகொலையின் பாணியில் இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருப்பதாக இணையத்திற்கு தெரிய வருகின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதேயிடத்தில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினர் பருதி அவர்கள் தேசவிரோதிகளின் வாள்வீச்சுக்கு இலக்காகியமை சுட்டிக் காட்டத்தக்கது.
இரவுவேளை இவர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது அங்கே காத்திருந்த சிலர் இவரை கத்தியால் வெட்டியும் குத்தியும் உள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்றும் இரவுவேளை அனுவலகத்தில் இருந்து வெளியேவந்தபோது நயவஞ்சகரினால் சூட்டுக்குள்ளாகி வீரச்சாவடைந்துள்ளார்.
மாவீரர் நாள் நெருங்கிவரும் இவ்வேளையில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் வீரச்சாவடைந்தமை ஈழத் தமிழர் மத்தியில் பேரிழப்பு ஆகும்

இது தொடர்பான முழு விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

ad

ad