புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 நவ., 2012


தமிழ் சினிமாவில உயரத்துல இருக்கிற வைரமுத்துவை கீழே இறக்கி விடுங்க!  அமீர் பேச்சு!
ருத்ரன் இயக்கும் ‘வெற்றிச்செல்வன்’ பட இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர்கள் பாலா, அமீர், சீனு ராமசாமி, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டனர்.இந்தப் படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ள ’மதன் கார்க்கி’ பேசும்போது பாடல் வரிகள்ள இருந்த இலக்கியச் சுவையை சொல்ல, மகிழ்ந்து போன அமீர் வழக்கத்துக்கு மாறா கைத்தட்டி ரசிச்சார்.
 
பிறகு அமீர் பேசும்போது, “தமிழ் சினிமாவில உயரத்துல இருக்கிற வைரமுத்து ரொம்ப நாளா அந்த சீட்லயே உக்காந்துக்கிட்டிருக்கார். அந்த இடத்துக்கு வந்து அவரை யாராலயும் இறக்க முடியலை. அவராவும் இறங்க மாட்டேங்கறார்.

இப்ப மதன் கார்க்கியோட பாடல்களைக் கேட்டதும் வைரமுத்துவை இறக்கிவிட சரியான ஆள் இவர்தான்னு தோணுது. எனக்கு வைரமுத்துவோட சேர்ந்து வேலை பார்க்கணும்னு ஆசை. ஆனா திருத்தம் தேவைப்பட்டா அவர்கிட்ட எப்படி அதைக் கேட்டு வாங்கறது..? அவர்தான் அதை ஏத்துக்குவாரா..?

அதனால அவர்கிட்ட நிறைவேறாத ஆசையை இப்ப கார்க்கியோட வேலை செய்து தீர்த்துக்கலாம்னு தோணுது. அதனால, நீங்களே வைரமுத்துவை இறக்கி விடுங்க, கார்க்கி… நாம ஒண்ணா வேலை செய்யலாம்..!” என்றார்.
அதைக் கேட்ட ‘மகன்’ கார்க்கி சிரித்துக்கொண்டார்.

ad

ad