புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 நவ., 2012



ஜெனீவாவில் இந்தியாவின் தலைமையில் ஸ்பெயின் மற்றும் பெனின் ஆகிய இரு நாடுகளும் இணைந்து அறிக்கை ஒன்றைத் தயாரிக்கவுள்ளன.

தமிழ்ப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட போர் வெற்றி கொள்ளப்பட்ட போதிலும், சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் இன்னமும் முழுமையான சமாதானத்தைக் கொண்டு வரவில்லை என்பதை இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது. இவ்வாறு தென்னிந்தியாவை தளமாகக்கொண்ட Deccan Chronicle ஆங்கில நாளேட்டில் Neena Gopal எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். 

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்கான கூட்டத் தொடரை நவம்பர் 01 அன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவானது ஜெனீவாவில் ஆரம்பித்துள்ளது. இவ்விவாதத் தொடர் முடிவடைந்த பின்னர் இது தொடர்பாக இந்தியாவின் தலைமையில் ஸ்பெயின் மற்றும் பெனின் ஆகிய இரு நாடுகளும் இணைந்து அறிக்கை ஒன்றைத் தயாரிக்கவுள்ளன. 

இந்த அடிப்படையில், இந்த மூன்று நாடுகளிலும் இந்தியாவானது மிகக் கடினமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலையிலுள்ளது. இந்தியாவானது தனது அயல்நாடான சிறிலங்காவை ஓரங்கட்ட முடியாது. அதேவேளையில், சிறிலங்காவில் வாழும் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு எதிராக இறுதிக் கட்ட உள்நாட்டு யுத்தத்தின் போதும், மே 2009ல் புலிகள் அழிக்கப்பட்ட போதும், இதேபோன்று யுத்தம் முடிவடைந்த பின்னரும் ராஜபக்ச அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட கொடுமைகளை விசாரணை செய்யும் போது இந்தியாவானது இதில் நேர்மையற்ற முறையில் நீதியற்ற முறையில் தீர்வினை முன்வைக்க முடியாது. 

அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா, சுவீடன், நெதர்லாந்து போன்ற நாடுகளைப் போல சிறிலங்காவுக்குச் சார்பான பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளும் சிறிலங்காவின் வடக்கில் தொடர்ச்சியாக நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் தொடர்பாகவும், வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் மேற்கொள்ளப்படாது இழுத்தடிக்கப்படுதல், கேலிச்சித்திர வடிவமைப்பாளரான பிரகீத் எக்னெலிகொட காணாமற் போனமை மற்றும் ஊடகவியலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள், சிறிலங்கா அரசாங்கத்தை விமர்சிப்போர் போன்றவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் போன்றவற்றை முதன்மைப்படுத்தி கேள்வி எழுப்பியுள்ளன. 

தமிழ்ப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட போர் வெற்றி கொள்ளப்பட்ட போதிலும், சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் இன்னமும் முழுமையான சமாதானத்தைக் கொண்டு வரவில்லை என்பதை இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது. 

கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, தென்கிழக்காசியா போன்ற இடங்களில் பரவி வாழும் புலம்பெயர் தமிழர் சமூகமானது உரத்துக் குரல் கொடுத்து வருவதுடன், கல்விமான்களாகவும், ஆற்றல் மிக்க சக்தியாகவும் ஒன்று திரண்டுள்ளனர். 

புலம்பெயர் வாழ் தமிழர்கள் தமது பக்கம் மற்றவர்களைக் கவர்ந்திழுக்கின்ற ஆற்றலையும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கு புத்துயிர் அளிக்கின்ற ஆற்றலையும் கொண்டிருக்கவில்லை ஆயினும், தமிழர் பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் அழுத்தம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக அழுத்தம் கொடுக்கின்ற அளவுக்கு புலம்பெயர் வாழ் தமிழர்கள் உரத்துக் குரல் கொடுக்கின்றனர் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. 

13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக இழுத்தடிப்புச் செய்வது தொடர்பில் இந்தியா ஆழ்ந்த அக்கறை காட்டும் அதேவேளையில், கடந்த வாரம் சிறிலங்காவின் அதிகாரம் மிக்க பாதுகாப்பு அமைச்சர் கோத்தாபய ராஜபக்சவுடன் இந்திய உயர் மட்ட அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்களில் இது தொடர்பாக எடுத்துக் கூறப்பட்டது. 

ராஜபக்ச அரசாங்கமானது 13வது திருத்தச் சட்டத்தை அமுல்ப்படுத்துவதில் விருப்பங் கொண்டிருக்கவில்லை என இந்திய மத்திய அரசாங்கம் நம்புகின்றது. ஏனெனில், மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதன் மூலம் அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொள்வதில் ஆர்வங்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் போன்ற தமிழ்ப் புலிகளின் முன்னாள் ஆதரவாளர்கள் போன்றோர் மாகாண சபைகளின் அதிகாரங்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரலாம் என ராஜபக்ச அரசாங்கம் கருதுகிறது. 

தமிழீழ விடுதலை அமைப்பு, தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஆர்.சம்பந்தனின் இலங்கை தமிழரசுக் கட்சி போன்றன தமிழ்ப்புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தன. ஆனால் தற்போது இக்கட்சிகள் அரசியற் கட்சிகளாகச் செயற்படுவதுடன், மக்கள் நீரோட்டத்துடன் கலந்து செயற்படுவதில் ஆர்வங்காட்டுகின்றன. இந்நிலையில் மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதன் மூலம் இவ்வாறான புலிகளின் ஆதரவுக் கட்சிகள் தமது அதிகாரத்தைப் பிரயோகிக்கலாம் என சிறிலங்கா அரசாங்கம் கருதுவதாக இந்திய மத்திய அரசாங்கம் நம்புகிறது. 

இந்தோ-சிறிலங்கா உடன்பாட்டில் வரையப்பட்ட 13வது திருத்தச் சட்டமானது வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்வதை நோக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழ் மக்கள் ஒரங்கட்டப்படுவது தவிர்க்கப்படும் என இந்தியா கருதுகிறது. ஆனால் இத்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்தும் சிறிலங்கா அரசாங்கம் மறுப்புத் தெரிவித்து வருவதானது பலரையும் விசனம் கொள்ள வைத்துள்ளது. 

முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரப்பட்ட யுத்தத்தால் ஏற்பட்ட அழிவுகளை மறைப்பதற்காக தற்போது சிறிலங்காவில் பொருளாதார அபிவிருத்திகள் மேம்படுத்தப்படுவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் இதேவேளை தற்போதும் அதாவது யுத்தம் முடிவடைந்து சமாதானம் நிலவுகின்ற போதிலும் தமிழர் வாழிடங்களில் ஒரு இலட்சம் வரையான இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். 

ஜெனீவாவில் சிறிலங்காவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விவாதத் தொடரில் ஐக்கிய நாடுகள் சபையால் வினவப்படும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காக ராஜபக்ச அரசாங்கமானது தனது பிரதிநிதிகள் குழுவை அனுப்பியுள்ளது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு தொடர்பில் சிறிலங்காவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து ஏற்கனவே இந்தியா வாக்களித்ததன் மூலம் இந்தியாவானது சிறிலங்கா விவகாரத்தில் நடுநிலையான தீர்மானம் ஒன்றை எடுப்பதை உறுதியாகக் கொண்டுள்ளமை வெளிப்படுகின்றது. 

ஆங் சாங் சூயியை வீட்டுக் காவலில் வைத்திருப்பதற்கும் பின்னர் அவரை விடுவிப்பதற்காகவும் பர்மா இராணுவ ஜெனரல்களுடன் இணைந்து இந்தியா செயற்பட்டது போன்று, தற்போது சிறிலங்கா அதிபர் ராஜபக்சவின் விவகாரத்திலும் இந்தியா செயற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ராஜபக்ச அரசாங்கம் இந்தியாவிடம் வாக்களித்தது போன்று 13வது திருத்தச் சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்பதை இந்திய மத்திய அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்த முடியும். 

தமிழ்ப் புலிகளை அழிப்பதில் சிறிலங்காவை முன்னர் ஆண்ட சந்திரிக்க குமாரதுங்க அரசாங்கம் பல்வேறு நகர்வுகளை முன்னெடுத்த போது இந்தியா இது தொடர்பில் வாளாவிருந்தது. இதேபோன்று ராஜபக்ச ஆட்சிக்கு வந்த போதும் இந்தியாவானது தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகரையும் வெளியுறவுச் செயலரையும் சிறிலங்காவுக்கு அனுப்பி புலிகளுக்கு எதிரான யுத்தத்தை தான் ஆதரிப்பதற்கான சமிக்கையை காண்பித்திருந்தது. சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தம் நிறைவுக்கு வரும் வரை புலிகள் அமைப்பை அழிப்பதற்காக சிறிலங்கா அரசாங்கங்களால் எடுக்கப்பட்ட நகர்வுகளை இந்திய மத்திய அரசாங்கமானது ஒருபோதும் பொருட்படுத்தவில்லை. 

ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர் அதாவது 2009ன் பிற்பகுதியில், சிறிலங்காத் தலைமையானது பல்வேறு அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்கி, வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை வழங்கி, அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்பதும் தமிழர் பிரதேசங்களில் புனர்வாழ்வுத் திட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் இந்திய மத்திய அரசாங்கம் வலியுறுத்தத் தொடங்கியது. 

13வது திருத்தச் சட்டத்தின் மூலம் முற்றுமுழுதாக, முழுஅளவில் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என கொழும்பில் பணிபுரிந்த மேற்குலக இராஜதந்திரிகள் சிலர் சுட்டிக்காட்டியிருந்தனர். சிறிலங்காவில் தமிழ் மக்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் போல் நடாத்தப்படக் கூடாது எனவும் மொழி மற்றும் இனம் போன்ற அடையாளங்களால் தமிழ் மக்கள் ஓரங்கட்டப்படக் கூடாது எனவும் இவ்வாறான நிலையை ஒழித்து தமிழ் மக்கள் சமஉரிமை பெற்று வாழ்வதை ராஜபக்ச அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. 

2016 வரை பொதுத் தேர்தலைச் சந்திக்கத் தேவையில்லை என்ற ஒரே காரணத்தினால் திரு.ராஜபக்ச தற்போதைய தனது சொந்த வாக்கு வங்கியை விட்டு அதற்கப்பால் செல்ல விரும்பாதிருக்காலாம். இதனால் ராஜபக்ச தான் விரும்பியவாறு ஆட்சி செலுத்த நினைக்கலாம். ஆனால் ஜெனீவாவில் மனித உரிமை விவகாரம் தொடர்பான ராஜபக்சவின் சிறப்புத் தூதர் மகிந்த சமரசிங்கவால் சிறிலங்கா விரும்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்பதே உண்மையாகும்.

புதினப்பலகை

ad

ad