புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2012





சுவிட்சர்லாந்தில் பனிப்பொழிவு அதிகம் இருக்கப்போவதால் பனிச்சரிவு ஏற்படும் அபாயமும் இருப்பதாக தேசிய வானிலைத் துறையான மீட்டியோ சுவிஸ் தெரிவித்தது.
இன்று காலை லாசேன், ஃபிரிபோர்க் உட்பட தெற்கு ஆல்ப்ஸ் பகுதியில் பனி அதிகமாக பெய்யும் என்பதால் பனிப்புயல் வீசக்கூடும்.
இந்தப் பனிப்புயலிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள சுவிட்சர்லாந்து தயாராகி
வருகிறது.
ஜெனீவா ஏரியிலிருந்து கான்ஸ்டன்ஸ் ஏரியின் கிழக்குப் பகுதி வரை தாழ்வான பகுதிகளில் ஐந்து முதல் பத்து சென்டிமீற்றர் வரை பனி பெய்யப் போவதால் சாலைகள் வழுக்கக்கூடும்.
நாட்டின் மிகப்பெரிய நகரமான சூரிச்சும் இந்தப் பனிப்பொழிவைச் சந்திக்கத் தயாராகிறது.
சுவிஸ் - இத்தாலி எல்லையில் உள்ள மலைப்பகுதிகள் அதிக ஆபத்துள்ள பகுதியாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
திசினோவின் ஆல்ட்டா வல்மகியா போன்ற பகுதிகளில் 100 முதல் 140 செ.மீ உயரத்திற்கு பனி படர்ந்திருக்கும்.
திசினோ, வலாய்ஸ் மாநிலங்களில் உள்ள மலைப்பகுதியில் நாளை 70 முதல் 140 செ.மீ. உயரத்திற்கு தரையில் பனி படர்ந்திருக்கும்.
அல்பைன் மலைப்பகுதியில் மலைச்சரிவு ஏற்படலாம் என்று வானிலை அறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
ஜெனீவா ஏரிக்கு அருகில் உள்ள லாசேனிலும் லாவாக்ஸ் திராட்சைத் தோட்டப் பகுதிகளில் 10 - 30 செ.மீ. உயரத்திற்கு பனி பொழியும் என்று வானிலை அறிவிப்பாளர் தெரிவித்தனர்.
பொரெண்ட்டுரு மற்றும் மோட்டியர் நகரங்களில் பனி பெய்யாது ஆனால் 50 - 80 மி.மீ மழை பெய்யக்கூடும்.
ஜெனீவாவில் பனி பெய்வது குறைந்து மழை பெய்வது அதிகரிக்கும்.
உலகத் தட்பவெப்ப அமைப்பு, நேற்று தட்பவெப்பத்தில் ஏற்பட்ட மாற்றம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், 2012ம் ஆண்டில் ஜனவரி முதல் ஒக்ரோபர் வரை மிகவும் வெப்பமாக இருந்தது.
1850க்குப் பின்பு இத்தகைய நீண்ட கால வெப்பம் இந்த ஆண்டுதான் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில், குளிர்காலத்தில் வெப்பம் 0 டிகிரிக்கும் குறைவாக இருக்கும். இத்துடன் பனிப்பொழிவும் மிக அதிகமாகும்.
உச்சிப் பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்கள் இந்தப் பனியை வரவேற்றுள்ளனர்.
வலாய்சில் உள்ள சாஸ்- ஃபீயில் 40 சதவீதம் ஓடுதளங்களில் விளையாட்டுகள் ஆரம்பித்து விட்டன.
கிராபூண்டென் மாநிலத்தில் உள்ள செயிண்ட் மோரிட்சிலும் வீரர்கள் குவிந்துவிட்டனர்.

ad

ad