புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2012


போர்க்காலத்தில் ஐ.நா. தன் கடமைகளைச் செய்ய தவறியது :- கருணாதிலக அமுனுகம
ஐ.நா.அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள உள்ளக அறிக்கை குறித்து அரசாங்கம் உத்தியோகபூர்வமாக எந்த விளக்கத்தையும் அளிக்கப்போவதில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும் கருணாதிலக அமுனுகம தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்கால் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்திக் கொண்ட தருணத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய முறையில் தனது கடமையை செய்யவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மீது இலங்கை அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகித்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வன்னி மீதான இறுதி யுத்தம் தொடர்பாக ஐ.நா.வினால் தயாரிக்கப்பட்ட உள்ளக இரகசிய அறிக்கை என்பது மிகச் சரியான முறையில் தயாரிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad