புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2012


கன்னடன் தண்ணீர் மறுப்பின் மின்சாரம் எதற்கு ? மின்சாரத்தை தடுப்பது உறுதி என்றார் ?சீமான்

காவிரி நீரை தர மறுத்தால் கர்நாடகாவிற்கு மின்சாரத்தை தடுத்து நிறுத்துவோம்: சீமான்
ஓசூர்: கர்நாடக அரசு காவிரி நீரை தமிழகத்திற்கு தர மறுத்தால், தமிழகத்தில் இருந்து அளிக்கப்படும் மின்சாரத்தை தடுத்து நிறுத்த போராட்டம் நடத்துவோம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர
் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு காவிரி நீரை அளிக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக, நேற்று ஓச
ூர் நகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சி ஆதரவாளர்கள், தமிழகத்திற்கு காவிரி நீர் கேட்டு கோஷமிட்டனர். நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்ப்பாட்டத்திற்கு
தலைமை தாங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது,
காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைவர் பிரதமர் மன்மோகன்சிங், தமிழகத்திற்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீரை அளிக்க உத்தரவிட்டார். ஆனால் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டோம் என்று கூறி, காவிரி நதிநீர் ஆணையத்தின் கூட்டத்தை புறக்கணித்தார்.
அதன்பிறகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு வணங்கி, தண்ணீரை திறந்துவிட்டது கர்நாடக அரசு. கடந்த 20ம் தேதி முதல் வரும் 15ம் தேதி வரை, மொத்தம் 25 நாட்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். ஆனால் எங்களுக்கே தண்ணீர் இல்லை. அதனால் 3 நாட்கள் மட்டுமே தண்ணீர் தருவோம் என்று கர்நாடக அரசு கூறி வருகிறது.
தமிழகத்தில் தற்போது அதிகளவில் மின்வெட்டு ஏற்படுகிறது. இருந்தாலும் அதை நாங்கள் சமாளித்து கொண்டு, எங்கள் மாநிலத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 6 லட்சம் யுனிட்டை கர்நாடகத்துக்கு வழங்குகிறோம். நாங்கள் இருட்டில் இருந்து கொண்டு, உங்களுக்கு வெளிச்சம் தர மின்சாரம் தருகிறோம்.
கர்நாடகா எங்களுக்கு சட்டப்படி தர வேண்டிய தண்ணீரை தர மறுத்தால், நாங்களும் இங்கிருந்து செல்லும் மின்சாரத்தை தடுத்து நிறுத்துவோம். கர்நாடகாவிற்காக நெய்வேலியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தடுத்து நிறுத்துவோம். அதற்காக முற்றுகை போராட்டம் நடத்துவோம்.
முன்னாள் கர்நாடக முதல்வர் அனுமந்தராவ் தமிழகத்திற்கு காவிரி நீரை தர மறுத்த போது இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி, ராணுவத்தை அனுப்பி தண்ணீரை திறப்போம் என்று கர்நாடக அரசை எச்சரித்தார். அதேபோல தற்போது கர்நாடக அரசை மத்திய அரசு எச்சரிக்குமா? உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நீரை மீட்க எங்களின் போராட்டம் தொடரும் என்றார்
.

ad

ad