புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2012


விசாரணைகளைப் பூர்த்தி செய்வதற்கு தெரிவுக் குழுவுக்கு ஒருமாத அவகாசம்

பாராளுமன்றமே கால நீடிப்பு செய்யலாம் - அமைச்சரவை பேச்சாளர்
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையை விசாரணை செய்வதற்கு தெரிவுக் குழுவுக்கு ஒரு மாத கால அவகாசமே வழங்கப்பட்டுள்ளது. இந்த கால எல்லையை நீடிப்பது குறித்து பாராளுமன்றமே தீர்மானிக்குமென பதில்
அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், தெரிவுக் குழு தலைவராக உள்ளபோதும் அங்கு பேசப்படும் விடயங்களை வெளியிட முடியாது. முதலாவது நாள் பிரதம நீதியரசர் தெரிவுக் குழு முன் ஆஜரானார். சட்ட விடயங்கள் குறித்து இங்கு ஆராயப்பட்டது. பிரதம நீதியரசர் தரப்பு விடயங்கள் முன்வைக்கவும் அவகாசம் வழங்கப்பட்டது.
தெரிவுக்குழு தொடர்பில் உள்ள வழக்குகள் குறித்து பாராளுமன்றமே முடிவு செய்யும். ஒரு மாத காலம் தெரிவுக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள போதும் தெரிவுக் குழுவுக்கு மேலும் கால அவகாசம் கோர முடியும்.
இது தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்ட பின்னரே அது பொதுவான அறிக்கையாகும். அதன் பின் அது குறித்து விவாதிக்க முடியும் என்றார்.

ad

ad