புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 நவ., 2012


பாரிஸ் ஓபன் டென்னிஸ் : பூபதி-போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

பாரிஸ் ஓபன் டென்னிஸ் : பூபதி-போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு 
முன்னேற்றம்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிஎன்பி பரிபாஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் மகேஷ் பூபதி-  ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் இந்த ஜோடி, போலந்தின் மரியுஸ்
பிர்ஸ்டன்பர்க்-மார்சின் மட்கோவ்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது.
பரபரப்பான இப்போட்டியில் இந்திய ஜோடி 6-7(5), 6-3, 6-4 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதியை உறுதி செய்தது. இதேபோல் 7-ம் தரநிலை ஜோடியான குரேஷி- ஜீன் ஜூலியன் ரோஜர் ஜோடி, 2-ம் தரநிலை ஜோடியான மேக்ஸ் மிரிண்யி-டேனியல் நெஸ்டர் ஜோடியை வீழ்த்தி 6-3, 6-4 என்ற நேர்செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதியில் பூபதி - போபண்ணா ஜோடி, பால் ஹேன்லி(ஆஸ்திரேலியா)-ஜோனாதன் மரே(இங்கிலாந்து) ஜோடியுடன் மோத உள்ளது.
முதல் முறையாக பாரிஸ் ஓபனில் இணைந்து விளையாடும் பூபதி-ரோகன் போபண்ணா ஜோடி, தற்போது அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் லண்டனில் நடைபெற உள்ள உலக சுற்று போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. குரேஷி-ஜீன் ஜூலியன் ரோஜர் ஜோடியும் உலக சுற்றுக்கு தகுதி பெற்றது.

ad

ad