ஞாயிறு, நவம்பர் 11, 2012


காரைநகர் வர்த்தகர் விசுவமடுவில் மர்ம மரணம்!
காரைநகர் வர்த்தகர் ஒருவர் விசுவமடுவில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கொலையாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
காரைநகர் புதுவீதியைச் சேர்ந்த குலசேகரம்பிள்ளை கிருபானந்தன் (வயது 47)  என்பவரே இவ்வாறு மரணமானவராவார்.
இவர் விசுவமடுப் பிரதேசத்தில் வர்த்தக நிலையம் வைத்திருந்ததாகத் தெரியவருகின்றது.
இவரது வர்த்தக நிலையத்தின் ஓட்டைப் பிரித்தே இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.