புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2012


ஒபாமாவின் வெற்றி தமிழர்களின் விடிவிற்கு வழிவகுக்க வேண்டும்!- பாஸ்கரா
அமெரிக்க தேர்தலில் பெருவெற்றி பெற்ற ஒபாமா அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதுடன் அவரின் வெற்றி இலங்கைத் தமிழர் வாழ்வில் வசந்தம் வீச வழிவகுப்பதுடன் இலங்கைப் பெரும்பான்மை மக்களுக்கு அமெரிக்க மக்களின் தாராளத் தன்மை புரிய வேண்டிய காலம் இது என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி. பாஸ்கரா தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
ஒபாமாவின் வெற்றியினை ஜனநாயக மக்கள் முன்னணி வாழ்த்துத் தெரிவிப்பதுடன் இலங்கை வாழ் தமிழ் மக்களின் ஆறு தசாப்த கால இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்பட வழிவகுக்க வேண்டிய காலம் கனிந்துள்ளது.
மேலும் அமெரிக்க மக்கள் ஆபிரிக்க அமெரிக்கனான சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த ஒருவரைத் தெரிவு செய்து உலகில் சிறந்த ஜனநாயக பண்பும் சமத்துவ வாழ்க்கைக்கும் முன்னுதாரணமாக தம்மை அடையாளம் காட்டிக் கொண்டுள்ளனர்.
இந் நடைமுறை மூலம் இலங்கை பெரும்பான்மை இன மக்கள் சிறந்த பாடத்தைக் கற்றுக் கொண்டால் இலங்கையும் ஓர் சிறந்த நாடாகவும் தன்னிறைவுடன் கூடிய அபிவிருத்தியை நோக்கி நகரும் நாடாக மாற்றமடையும் எனத் தெரிவித்தார்.

ad

ad