புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2012


ஐ.நாவின் உள்ளக அறிக்கை: அடுத்த கட்ட நடவடிக்கையை ஆராய மற்றுமொரு குழுவை நியமிக்கிறார் பான் கீ மூன்
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்த சார்ள்ஸ் பெற்றியின் அறிக்கை, பான் கீ மூனிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் இறுதி யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை தமது பொறுப்புக்களை சரிவர செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனை ஏற்றுக் கொண்டுள்ள பான் கீ மூன், இந்த அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்த கட்டமாக செய்ய வேண்டிய விடயங்கள் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு, பான் கீ மூன் இந்த குழுவை நியமிக்கவுள்ளார்.

ad

ad