புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2012

பாலிவுட்டின் முன்னாள் பிரபல கதாநாயகியான மனிஷா கொய்ராலா
உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பம்பாய், உயிரே, இந்தியன் மற்றும் தனுஷ் நடித்த மாப்பிள்ளை போன்ற தமிழ்ப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடந்து நேற்று மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனவே, சில நாட்கள் மருத்துவமனையில் தங்கும் அவருக்கு சில மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தி, தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள மனிஷா கொய்ராலா, நேபாளின் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர். விவாகரத்து பெற்ற 42 வயதான நடிகை மனிஷா, 1991-ம் ஆண்டு சௌதாகர் என்னும் இந்தித் திரைப்படம் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமானார்.

ad

ad