புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2012

அதிர்வு இணையம் இப்படி எழுதி உள்ளது எது உண்மை?
விநாயகம் கைது உறுதிப்படுத்திய பிரான்சின் உளக உளவுத்துறை 
கேணல் பரிதியின் கொலை தொடர்பாக தாம் விநாயகம் என்னும் நபரைக் கைதுசெய்து விசாரித்துள்ளதாக, பிரான்சின் உள்ளக உளவுத்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளார்கள். லீவலோ பற்றிக் செடெக்ஸ்(DCRI, BP307, 92302 Levallois, Perret
, Cedex) என்னும் இடத்தில் அமைந்துள்ள அவர்களது உளவுத்துறையின் உத்தியோகபூர்வ காரியாலயத்தோடு யாரும் தொடர்புகளை மேற்கொள்ளலாம்: இவர்களது இலக்கம்: +33177925000. இந்த உளவுப் பிரிவினரை தொடர்புகொண்டால், அவர்களிடம் இருந்து கைதானவர்கள் தொடர்பாக மேலதிகத் தகவல்களைப் பெறமுடியும். எமது செய்தியாளர் பிரான்ஸ் உளவுத் துறையிடம் இருந்து பெற்ற தகவலையே, அதிர்வு நேற்றைய தினம் வெளியிட்டது. 

இலங்கை போல பிரான்ஸ் நாட்டில், விசாரணை எதுவும் இன்றி பல நாட்களாக ஒருவரை சிறையில் தடுத்துவைக்க முடியாது. எனவே விசாரணை முடிவடையும் பட்சத்தில், விநாயகத்தை வெளியே விடவேண்டும். பின்னர் நீதிமன்ற விசாரணைக்கு அவர் அழைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கொலைசெய்த குற்றவாளி, அவரைத் தூண்டிய நபர்கள், பின்னணியில் செயல்பட்ட சக்திகள் இவை அனைத்தையும் இனங்காண சில வருடங்கள் கூட ஆகலாம். இதுவரை பொலிசார் 15க்கும் மேற்பட்ட நபர்களை கைதுசெய்து விசாரித்துள்ளார்கள். மற்றும் 8 க்கும் மேற்பட்ட நபர்களிடம் சென்று விசாரணைகளை நடத்தியுள்ளார்கள். இவர்களில் பலரை நிபந்தனை அடிப்படையில்(நாட்டை விட்டு வெளியேறக்கூடாது + சரீரப் பிணையில்) விடுதலை செய்துள்ளார்கள் பிரெஞ்சுப் பொலிசார்.

இதேவேளை வீரச்சாவடைந்த கேணல் பரிதி அவர்களின் இறுதி நிகழ்வுகள் 24ம் திகதி சனிக்கிழமை நடைபெறும் என்று பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ad

ad