புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 நவ., 2012


ஐநாவின் மூத்த அதிகாரி சார்ள்ஸ் பெற்றியின் அறிக்கையின் மூலம் இலங்கைக்கு அழுத்தம்
பிரித்தானியைவைச் சேர்ந்த ஐநாவின் மூத்த அதிகாரியான சார்ள்ஸ் பெற்றி தயாரித்த அறிக்கையை கொண்டு சர்வதேச நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கவிருப்பதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
அதன் செயலாளர் வசந்த பண்டார கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது இதனைத் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் இறுதி யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை பொது மக்களை பாதுகாக்க தவறிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும் இதனைக் கொண்டு இலங்கையில் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலும் மனித உரிமைகள் தொடர்பிலும் பல்வேறு ஆதாரங்களை ஐக்கிய நாடுகள் சபை சேகரித்துக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் இதனைக் கொண்டு எதிர்வரும் காலங்களில் இலங்கை மீது சர்வதேச நாடுகள் பல்வேறு அழுத்தங்களை கொடுக்க முடியும்.
எனினும் இது தொடாபில் அரசாங்கம் அசட்டையாக நடந்துக் கொள்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐ.நாவின் இரகசிய அறிக்கையில் சில பகுதிகளை கறுப்பு மையினால் அழித்தமை சரியானதே! - ஐ.நாவின் உயரதிகாரி
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா தவறியமை தொடர்பான அறிக்கையில் சில பகுதிகளை கறுப்பு மையினால் மறைக்கப்பட்டிருந்தமையை சரி என்கிறார் ஐ.நா அமைப்பின் உயரதிகாரி ஒருவர்.

ஐ.நா. அமைப்பின் பணியாளர்களை பாதுகாக்கவும், சில இரகசிய ஆவணங்களைப் பாதுகாக்கவும் மீளாய்வு அறிக்கையின் சில பகுதிகளை தணிக்கை செய்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயரதிகாரி சுசனா மெல்கொரா தெரிவித்துள்ளார்.

சில தகவல்கள் உள்ளகத் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் அவற்றை பகிரங்கப்படுத்த வேண்டிய அவசியமுமில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளக அறிக்கைகளின் சகல விடயங்களையும் பகிரங்கப்படுத்துவது பொருத்தமான தீர்மானமாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில தகவல்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவற்றை பகிரங்கப்படுத்துவது பொருத்தமாகது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பக்கச்சார்பற்ற வகையிலும், ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும் இந்த அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கூடுதல் சிரத்தை எடுத்துக் கொண்டதாக சுசனா மெல்கொரா மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad