புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2012


இலங்கையில் விட்ட தவறுகளை ஐ.நா. இனி விட கூடாது: சனல்
ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் விட்ட தவறுகளை எதிர்வரும் காலங்களில் மீண்டும் விடகூடாது என்ற உறுதி வழங்கப்பட வேண்டும் என்று சனல் 4 செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கொலைக்களம் திரைப்படத்தை இயக்கிய சனல் 4 செய்தியாளர் கொலம் மெக்ரே இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இரத்தகளரியை அரசாங்கம் ஆரம்பிக்கும் போது, இந்த செயற்பாடுகளுக்கு சாட்சியங்களை இல்லாது செய்யும் பணிகளையும் அரசாங்கம் நடத்தியது. அதன் அடிப்படையில் வடக்கில் இருந்து ஊடகங்கள் வெளியேற்றப்பட்டன.

(இலங்கையின் கொலைக்களங்கள் குறுந்திரைப்படமாகியது)
சர்வதேச ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டன. அத்துடன் இந்த பகுதியில் இருந்து சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் அகற்றப்பட்டது.
அதன்அடிப்படையிலேயே ஐக்கிய நாடுகள் சபையும் அங்கிருந்து விலகிக் கொண்டது. இது அரசாங்கம் பொது மக்களுக்கு எதிரான ரத்த களரிக்கு துணைபோகும் வகையிலான செயற்பாடாக அமைந்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் நடைபெறாதிருக்கவும், ஐக்கிய நாடுகள் மீதான நம்பிக்கை பேணப்படவும், ஐக்கிய நாடுகள் சபை அதற்கு ஈடான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad