புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2012



தமிழீழ விடுதலைப் புலிகள், 
தமிழீழம்.
20-11-2012.

ஒன்றுபட்டு நின்று சிங்களத்தின் சதிகளை முறியடிப்போம்!

எமது அன்புக்குரிய தமிழ்மக்களே, போராளி நண்பர்களே,

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் எமதமைப்புக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பாரிய அழிவுகளின் பின்னர், இன்று புலம்பெயர் நாடுகளிற் தமிழர்கள் மத்தியிற் பல பிரிவினைகள் உருவாகியுள்ளனளூ எதிரியாற் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளன.

சிங்களத்தின் சதிச்செயல்களே இதற்கு முக்கிய காரணமாகும். எதிரியிடம் விலை போய்விட்ட தமிழ்க் கைக்கூலிகளின் செயற்பாடுகள்ளூ இவை பற்றி ஏதுமறியாது அந்தச் சதிச்சுழலுக்குள் அகப்பட்டுக் கொண்ட மக்கள் மற்றும் சில போராளிகளின் செயற்பாடுகள்ளூ தமது கடமையை மறந்துவிட்டு முறையற்ற வகையில் வேறு பணிகளிற் தலையிட்டுக் குழப்பும் சில போராளிகளின் நடவடிக்கைகள்ளூ தமிழ்மக்களின் நலன்களை முதன்மைப் படுத்தாமற் சுயநல அடிப்படையிற் செயற்படும் சில தனிநபர்கள் மற்றும் தூரநோக்குச் சிந்தனையற்றுச் செயற்படும் சில ஊடகங்கள் போன்றவற்றுக்கும் அதிற் பங்குண்டு.

முள்ளிவாய்க்காலின் பின்னர், தமிழீழத்திலிருந்து புலம்பெயர் நாடுகளை நோக்கி வந்த குறிப்பிட்ட சில போராளிகளாற் தலைமைச்செயலகம் என்ற பெயரில் ஒரு அணி உருவாக்கப்பட்டது. இவர்களது தான்தோன்றித்தனமான அடாவடித்தனமான நடவடிக்கைகள் தமிழரின் ஒற்றுமையைக் குலைக்கும் வகையிலேயே அமைந்தன. அதேவேளை புலம்பெயர் நாடுகளில் இயங்கும் எமது பணியகங்களை முன்னர் நிர்வகித்து வந்த அனைத்துலகத் தொடர்பகத்தைச் சேர்ந்த ஒரு சில போராளிகளின் தூரநோக்குச் சிந்தனையற்ற, தெளிவற்ற முடிவுகள் மற்றும் செயற்பாடுகள் அனைத்துலகத் தொடர்பகத்துடன் தலைமைச்செயலக அணியானது மோதல் போக்கை அதிகரித்துச் செல்ல வழிவகுத்தது. இந்த முரண்பாடுகளை மிகவும் சரியாகப் பயன்படுத்திய சிறிலங்காப் புலனாய்வுத்துறையினர் தமிழர்களுக்குள் மிக ஆழமாக ஊடுருவியுள்ளனர். இதனால் ஏற்பட்ட விளைவுகளாலேயே உலகத்தமிழரெல்லாம் மனம் நெகிழ்ந்து கண்ணீர் சிந்தும் வண்ணம், எமது மூத்த போராளியும் பொறுப்பாளருமாகிய கேணல்.பரிதி அவர்களை நாம் இழக்க நேரிட்டுள்ளது.

இன்றுள்ள முரண்பாட்டுச் சூழ்நிலைகளை மாற்றித் தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த செயற்பாட்டுக்கு வருவதற்கு நாம் செய்ய வேண்டியுள்ள முன்னெடுப்புப் பணிகளை உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.

எமதருமைப் போராளி நண்பர்களே,

அனைத்துலகத் தொடர்பகம் என்பது, எமது தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு துறையாகும். அது தனி மனிதர்கள் சிலரின் சொத்தன்று. அனைத்துலகத் தொடர்பகத்திற் பணி வழங்கப்பட்டிருந்த சிலர் தவறிழைத்தால் அதற்காக அனைத்துலகத் தொடர்பகமே தவறென்று கூறுவதும்ளூ போட்டி அணியை உருவாக்குவதும் எமதியக்க மரபன்று. முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் பின், இன்று தமிழினம் தமது நாட்டை முற்று முழுதாக எதிரியின் கைகளில் இழக்கும் நிலைக்கு வந்துள்ளது. இதனை மறந்து அனைத்துலகத் தொடர்பகம் என்றும், தலைமைச்செயலகம் என்றும் குறுகிய வட்டங்களுக்குள் அணிகளாகப் பிரிந்து நின்று செயற்படாமல், நாமனைவரும் விடுதலைப்புலிகள் என்ற எண்ணத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாங்கள் தமிழீழத் தேசியத்தலைவரின் வழிகாட்டலில், எமது தேசத்தின் விடிவுக்காகத் தமதின்னுயிர்களை அர்ப்பணித்த, நாம் என்றும் நேசித்த தளபதிகளையும் மாவீரர்களையும் மக்களையும் மனதிலிருத்திக் கடந்த பல ஆண்டுகளாக எவருடனும் மோதற்போக்கைக் கடைப்பிடிக்காமல் எமது செயற்பாடுகளைச் சரியான வழியில் உறுதியுடன் செய்து வருகின்றோம். இதன் பயனாகப் புலம்பெயர் நாடுகளில் எமது பணியகங்கள் அனைத்தையும் இன்று இறுக்கமான ஒரு நிர்வாகக் கட்டமைப்புக்குள் கொண்டு வந்துள்Nளாம்.

எமதியக்கத்தில் முக்கியமான பொறுப்புக்களை வகித்த பொறுப்பாளர்களே, பல சாதனைகளைச் செய்த தளபதிகளே,

இறுதிவரை களத்தில் நின்று, தம்மை ஈன்றெடுத்த பெற்றோரையும் தாம் ஈன்றெடுத்த பிள்ளைகளையும் குடும்பத்தையும் விட்டுப்பிரியப்போகும் தருணத்திலும்ளூ எதிரியிடம் மண்டியிடாது மண்ணுக்காகப் போராடி மடிந்த எமது வீரமிக்க தளபதிகள், எமது திறமை மிக்க போராளிகள், எம்மையும் மண்ணையும் நேசித்த மக்கள் எல்லோரையும் எண்ணிப்பாருங்கள். எமது மாவீரர்கள் எவருமே மாவீரர்நாள் நடாத்தித் தம்மைச் சிறப்பிக்க வேண்டுமென எதிர்பார்க்கவில்லை. தாயகத்தின் விடுதலையை நோக்கி நாம் தொடர்ந்தும் செயற்படவேண்டும்ளூ விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற ஒரேயொரு எதிர்பார்க்கை மட்டுமே அவர்கள் எல்லோரின் மனங்களிலும் எப்போதும் நீங்காதிருந்தது. ஆகவே அவர்களின் தியாகங்கள் வீண்போகக் கூடாதெனில் நாம் எமது இலட்சியத்தை நோக்கி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதை விடுத்து ஒவ்வொரு வருடமும் மாவீரர்நாள் நடாத்துவதில் மட்டும் போட்டி போடுவதும், அதில் மட்டும் அக்கறை செலுத்துவதும் மிகவும் வெட்கத்துக்கும் வேதனைக்குமுரிய விடயமாகும். அது மட்டுமன்றி நமது மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் பாரதூரமான ஒரு செயலுமாகும். ,து தமிழர்களின் பலத்தைச் சிதறடித்து எமது அழிவுக்கே வழிவகுக்கும். இப்படியான நடவடிக்கைகளை, எமது தேசியத்தலைவர் அவர்கள் ஒருபொழுதும் விரும்பவில்லைளூ இவற்றை ஏற்றுக்கொள்ளவுமில்லை. இதை நாமனைவரும் மிகத்தெளிவாக எங்கள் மனங்களிலிருத்திச் செயற்படல் வேண்டும்.

எமது மண்ணின் புனித நாளாகிய மாவீரர்நாள் நெருங்கி விட்டது. அதற்கு முன்னர், தமிழர்களிடையே ஏற்பட்டுள்ள பிளவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இது உங்களனைவரின் கைகளிலும், முடிவுகளிலுமே தங்கியுள்ளது. நீங்கள் எடுக்கப் போகும் இந்த முடிவு, தமிழரின் வரலாற்றில் முக்கிய மாற்றமாக அமையும். அதுமட்டுமல்லாது இதுவரை காலமும் நீங்கள் செய்த சாதனைகளும் அர்ப்பணிப்புகளும் போற்றப்படும் காலம் உருவாகும். நீங்கள் நெஞ்சை நிமிர்த்திக் கௌரவத்துடன் மக்கள் மத்தியில் நடமாட முடியும்.

ஆனால் இதனை நீங்கள் செய்யத் தவறுவீர்களேயானால், நீங்கள் கடந்த காலத்தில் செய்த சாதனைகளுக்காகவும் தியாகங்களுக்காகவும் இனிமேலும் யாரும் உங்களை மதிக்கப் போவதில்லை. அதுமட்டுமன்றி மக்கள் உங்களைத் தூக்கி எறியும் காலம் மிக விரைவில் வரும். வரலாறு உங்களைப் பழிக்கும். உங்கள் சந்ததிகளுக்கும் அந்த அவப்பெயர் தொடரும். இதுவே எமது விடுதலைப் போராட்டத்தின் கடந்தகால வரலாறு உங்களுக்குக் கூறி நிற்கும் படிப்பினையாகும். பிரிவினைகளை மறந்து தன்முனைப்பைத் துறந்து ஒன்று திரண்டு பொது எதிரிக்கெதிராகப் போராட வரும்படி உங்களனைவருக்கும் இத்தால் அறைகூவல் விடுக்கின்றோம்.

புலம்பெயர் நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராளிகள் சிலரின் அணி மோதல்களைப் பார்த்து மனம் நொந்து, செய்வதறியாது அமைதி காக்கும் எமதினிய போராளி நண்பர்களே,

இன்றுள்ள இந்தச் சூழலை மாற்றியமைக்க வேண்டிய பெரும் பொறுப்பு உங்கள் கைகளிலும் தங்கியுள்ளது. அனைத்து நாடுகளிலுமுள்ள எமது பணியகங்களும் ஒரே நிர்வாகக் கட்டமைப்புக்குள் வந்துள்ள இன்றைய நிலையில், அனைத்துலகத் தொடர்பகம் - தலைமைச்செயலகம் என்ற மோதல்களுக்கு இடமளிக்காமல், விடுதலைப்புலிகள் என்ற ஒரே குடையின் கீழ் வந்து ஒன்று திரளுமாறு உங்களை அன்பாக அழைக்கிறோம். நீங்கள் இதற்காகச் செய்ய வேண்டியதெல்லாம் நீங்கள் வாழும் நாட்டிலுள்ள எமதியக்கப் பணியகங்களின் நடவடிக்கைகளுக்கு உங்களின் முழு ஒத்துழைப்பையும் வழங்குவது மட்டுமேயாகும். இதன் மூலமே நாம் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முடியும். இதன் மூலமே தமிழர்களின் பலத்தை நாம் மீண்டும் உருவாக்க முடியும்.

தூர நோக்கமேதுமின்றி இலட்சிய உறுதியுமின்றி எமதியக்கத்தின் பலத்தை, தமிழினத்தின் பலத்தைச் சிதைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் செயல்களுக்குத் துணைபோக வேண்டாம் என்று உங்களை உரிமையுடன் வேண்டுகிறோம்.

எமது அன்பான மக்களே,

இந்தப் போராட்டம் உங்கள் அனைவராலும் கட்டி வளர்க்கப்பட்டது. தமிழர்களுடைய பலம் உங்களால் உருவாக்கப்பட்டது. நீங்கள் கொடும் வெயிலிலும் கடுங்குளிரிலும் வெளிநாட்டு இயந்திர வாழ்க்கையிற் கடினமாக உழைத்தே எமது போராட்டத்தை வளர்த்து விட்டீர்கள். இன்று எமது போராட்டம் வலுத்தேடி நிற்கும் இவ்வேளையில், அதற்கு ஆதரவளித்துக் கட்டிக்காக்க வேண்டிய கடமையும்ளூ இன்று எம்மிடையே உருவாகியிருக்கும் ஒற்றுமையின்மைக்கும் குழப்பங்களுக்கும் முடிவு கட்ட வேண்டிய பொறுப்பும் உங்களுக்கும் உண்டு.

பிரிந்து நின்று செயற்படுபவர்களை ஒரு குடையின் கீழ்க் கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் எம்மிடையே உள்ள பிரிவினைகளைப் பயன்படுத்தி, எதிரியானவன் தனது கைக்கூலிகளான தமிழினத் துரோகிகளின் துணையுடன் எமது மக்களின் விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணித்துச் செயலாற்றி வரும் எமது விடுதலைப் போராளிகள் மற்றும் பொறுப்பாளர்களை இலக்கு வைப்பான். பிரிவினைகளை முடிவுக்குக் கொண்டுவந்து விரைவாக நாம் ஒன்றுபட வேண்டும் என்பதே கேணல்.பரிதி அவர்களின் வீரச்சாவு நிகழ்வு நம்மனைவருக்கும் சொல்லும் செய்தியும் விடுத்துள்ள எச்சரிக்கையுமாகும். இதை நாமனைவரும் நன்கு புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டிய தருணம் இதுவாகும்.

இன்று தமிழீழம் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் நிரம்பி வழிகிறது. தமிழர் நிலங்களிலெல்லாம் சிங்களப் படைமுகாம்களும், புதிய புதிய சிங்களக் குடியிருப்புக்களும், போதிமரங்களைக் காணுமிடமெங்கும் புத்தவிகாரைகளும் நாள் தோறும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. தமிழரின் மரபுவழித் தாயகத்தை இல்லாதொழிக்கப் புதிய நிர்வாக எல்லைக்கோடுகள் மாற்றம் பெற இருக்கின்றன. தமிழீழப் பகுதிகளெங்கும் சிங்கள இனத்தவருக்கே வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. அதைச் சாக்காக வைத்துச் சிங்களவர் நமது நிலங்களிற் குடியேறுகின்றனர். சிங்களப் படையினரும் சிங்களத் தொழிலாளர்களும் தமிழ்ப்பெண்களைத் திட்டமிட்டுத் திருமணம் செய்கின்றனர். எமது இளந்தலைமுறையினர் திட்டமிட்ட பண்பாட்டுச் சீரழிவுக்குட் தள்ளப்படுகிறார்கள். இவையெல்லாவற்றின் மூலமும் சிங்களம் பாரிய இனவழிப்பை மேற்கொண்டு வருகின்றது. இவற்றைக் கருத்திற் கொள்ளாத சிலர் தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் மறந்துளூ கண்ணியத்தைத் துறந்துளூ எமது விடுதலையமைப்பின் கட்டுப்பாடுகளைக் காற்றிலே பறக்கவிட்டுளூ மாவீரர்நாளை நடாத்துவதில் மட்டும் தமது அக்கறையைக் காட்டி நிற்பது வருத்தத்துக்குரியதாகும்.

பிரிவினைகளின்றி மாவீரர்நாள் ஒவ்வொரு நாட்டிலும் ஒரே நிகழ்வாக நடாத்தப்பட வேண்டும் என்றும்ளூ அதற்காகத் தொடர்புடையவர்கள் கலந்து பேச வேண்டும் என்றும் விரும்பும் அன்புள்ளங்களின் ஆதங்கங்களை நாம் அறிவோம். ஆங்காங்கே தனித்தனியாக எமது பணியகங்களிலுள்ளவர்கள் சமரச முயற்சிகளில் ஈடுபடுவது, தேவையற்ற குழப்பங்களுக்கும் தனிப்பட்ட முரண்பாடுகளுக்கும் இடமளித்து விடலாம் என்பதால், இவ்விடயங்கள் யாவும் சரியான நிர்வாக ஒழுங்குகளின்படி எமக்கு ஊடாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என எமது பணியகங்கள் யாவற்றுக்கும் நாம் அறிவுறுத்தியுள்ளோம். இதுநாள்வரை நாம் மேற்கொண்ட நல்லெண்ண ஒற்றுமை முயற்சிகளைத் தொடரத் தொடர்புடையவர்கள் விரும்பவில்லை என்பதே உண்மை நிலவரம் என உங்களுக்குத் தெரிவிக்கிறோம். எனினும் நாம் ஒற்றுமைக்கான எல்லா வாயில்களையும் இப்போதும் அகலத் திறந்தே வைத்துக் கொண்டிருக்கிறோம். நல்லெண்ணம் என்பதோ ஒற்றுமைக்கான முன்முயற்சிகளோ வெறும் பேச்சிலன்றிச் செயல்களில் வெளிப்பட வேண்டும் என்பதே என்றென்றும் எமதியக்கத்தின் நிலைப்பாடாகும்.

மாவீரர்நாள் என்பது தமது விடுதலைக்காகக் களமாடி வித்துக்களாக வீழ்ந்துவிட்ட வீரக்குழந்தைகளின் நினைவேந்தி, மக்களால் நடாத்தப்படும் ஒரு புனித வணக்க நாளாகும். மக்களால் மாவீரர்களுக்காக நடாத்தப்படும் மாவீரர்நாளை நடாத்துவதிற் தமது கவனத்தைச் செலுத்தாமல்ளூ விடுதலைப்புலிகளாக இருப்பவர்கள் சிங்களப்பேரினவாத அரசுக்கு எப்படிப் பதிலடி கொடுப்பது என்பதிற் தமது கவனத்தைச் செலுத்த வேண்டும். அதற்காகத் தம்மைத் தயார்படுத்த வேண்டும். அதை மட்டுமே எமது மாவீரர்கள் எம்மிடமிருந்து எதிர்பார்த்தார்கள். அதற்காகவே தேசியத்தலைவர் எம்மை நெறிப்படுத்தி வளர்த்தார். அதற்காகவே ஷ300 வீரர்கள்| என்ற திரைப்படத்தை நாமனைவரும் பார்க்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார். புலம்பெயர் நாடுகளுக்குச் சென்று புதிய பெயரில் அணியொன்றை உருவாக்கும்படியோளூ எமதியக்கக் கட்டமைப்பைக் கூட்டம் கூட்டி விமரிசனம் செய்யும்படியோளூ அங்கெல்லாம் மாவீரர்நாளைப் பொறுப்பெடுத்து நடாத்தும்படியோ தேசியத்தலைவர் எவரையும் பணித்ததில்லை. அங்ஙனம் யாராவது செய்வதையும் அவர் விரும்பவோ ஏற்றுக்கொள்ளவோ இல்லை. இவ்விடயங்களைத் தவறான வழியிற் செல்வோர் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாவிடில் மக்களாகிய நீங்கள் அவர்களுக்கு அவற்றைப் புரிய வைக்க வேண்டும்.

தமிழர்களின் பலத்தை ஒரு சிலரின் தன்னலங்கருதிய, இலாபநோக்கங்கருதிய, குறுகியவட்டச் செயற்பாடுகளுக்குள் முடக்கிவிட நாம் இடமளிக்கக் கூடாது. எமது ஒருங்கிணைந்த நிர்வாகத்தைப் பலப்படுத்துவதன் மூலமே நாம் இதனைச் சாதிக்க முடியும். ஆகவே 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் யாரால் மாவீரர்நாள் ஒழுங்கு செய்து நடாத்தப்பட்டதோ அவர்களால் வழமை போல உங்கள் நாட்டில் நடாத்தப்படும் நிகழ்வுக்கே நீங்களனைவரும் சென்று மாவீரர்களுக்கு உங்கள் வணக்கத்தைச் செலுத்தும்படி பணிவன்புடன் வேண்டுகின்றோம். இதன் மூலம் மட்டுமே பிரிந்து நின்று நடாத்தப்படும் செயற்பாடுகளுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.

தமிழருக்கான ஊடகங்களே,

ஊடகங்கள் சனநாயகத்தின் நான்காவது தூணெனவும் அரசின் நான்காவது கிளையெனவும் குறிப்பிடப்படுகின்றன. அதற்கேற்ப எமது தேசியத்தையும் விடுதலைப் போராட்டத்தையும் கட்டிக்காக்கும் பொறுப்புடன் நடக்க வேண்டிய கடமை உங்களனைவருக்கும் உண்டு. செயல்களும் கொள்கை நோக்கங்களும் விவாதிக்கப்படலாமே தவிரத் தனிமனிதர்களையும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அவதூறு செய்யும் நோக்குடன் விமர்சிப்பது ஊடகதர்மம் அன்று. எம்மிடையே பிரிவினைகளை வளர்க்கும், தனிமனிதர்களை அவதூறு செய்யும், தெளிவற்ற செய்திகளை வெளியிட்டுத் தமிழ்மக்களைக் குழப்பங்களுக்குள் ஆழ்த்துவதை நீங்கள் தவிர்க்க வேண்டும். பரபரப்புக்காக எவ்வித ஆதாரமும் அற்ற கற்பனைகளையும் வதந்திகளையும் செய்திகளாக்கி வெளியிடாதீர்கள் எனவும் அதுபோலவே நீங்கள் அறியும் உண்மைகளையும் காலமறிந்து பொறுப்புடன் வெளியிட வேண்டும் எனவும் உங்களை அன்பாக வேண்டுகிறோம்.

எமதியக்கத்திற் களமாடிய பெண்போராளிகளைச் சிங்களப்படைக் கொடியவர்கள் அவமானப்படுத்திய படங்களைத் தயக்கமேதுமின்றி வெளியிடும் நீங்கள், இவற்றைக் காண நேரும் அவர்களின் தாய்தந்தையர், உடன்பிறந்தோர், உறவினரின் உள்ளங்கள் என்ன பாடுபடும் என்று எண்ணிப்பாருங்கள். அதே சமயம் உங்கள் அக்காவினதோ தங்கையினதோ அல்லது உங்கள் உறவினரினதோ இவ்வாறான படங்களை நீங்கள் வெளியிடத் துணிவீர்களா என்றும் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். அந்தப் படங்கள் யாவும் மனித உரிமை அமைப்புக்களுக்கும் ஐக்கிய நாடுகள் அவைக்கும் மட்டுமே வழங்கப்பட வேண்டியவை. அந்தப் படங்களை மலினமான விளம்பரத்துக்காக எவ்விதத் தணிக்கையுமின்றி உலகமெல்லாம் காணும்படி வெளியிடும் உங்கள் பண்பற்ற செயலானது சிங்களப்படையினர் அவர்களுக்கு இழைத்த கொடுமைகளுக்கும் அவமானங்களுக்கும் சற்றும் வேறுபாடற்றதும் குறைவற்றதும் ஆகும். எனவே இவ்வாறான படங்களை வெளியிடுவதை முற்றாக நிறுத்துமாறு உங்களனைவரையும் வேண்டுகிறோம்.

தனிப்பட்ட நலன்கருதித் தன்னலத்துடன் செயற்படுவதும் பிரிவினைகளை ஏற்படுத்துவதும் தமிழர் பலத்தைச் சிதைத்துவிடும். இதனைப்புரிந்து கொள்ளாது பிரிவினைகளை வளர்க்க நினைப்போரையும் தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டே தமிழ்த்தேசியத்துக்கு எதிராகச் செயற்படுவோரையும் வரலாறு தண்டிக்கும். எமது மக்களின் மனங்களில் இருந்து அவர்கள் நீங்கிவிடுவார்கள். ஆகவே இன்றுள்ள சூழலைச் சரிவரப்புரிந்து கொண்டு, ஊடக தர்மத்தினின்று வழுவாமற் தமிழர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த உழைக்குமாறு உங்களை வேண்டுகிறோம்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

ad

ad