புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 நவ., 2012



யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளதாவது.
இலங்கையில் கருத்து வெளியிடும் சுதந்திரத்தின் மீது அண்மையில்
விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்கத் தூதரகம் கரிசனை கொண்டுள்ளது.
கடந்த நவம்பர் 28ம் திகதி யாழ்ப்பாணத்தில் செய்தியாளரொருவர் தாக்கப்பட்டமை மற்றும் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளால் சுயாதீன ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்படும் தொல்லைகள், பிடிவிறாந்துகளின்றி ஊடகவியலாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கைகள் என்பன ஊடக சுதந்திரத்தை முடக்குவதற்கு துணை நிற்பவைகளாகும்.
இதற்கு மேலாக யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் பெரிதும் கரிசனை கொண்டுள்ளது.
பொறுமையை கடைப்பிடிக்குமாறும் அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு மதிப்பளிக்குமாறும் நாம் அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கின்றோம் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ad

ad