செவ்வாய், நவம்பர் 13, 2012

வெலிக்கடை சிறையில் இந்திய அதிகாரிகள் விசாரணை
கடந்த வெள்ளிக்கிழமை வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக இந்திய அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்ததோடு 40க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.அத்துடன் இச் சிறைச்சாலையில் இந்தியாவைச் சேர்ந்த 33 கைதிகள் உள்ளனர். மேலும் 5 கைதிகளின் வழக்குகள் வெலிக்கடைச் சிறைச்சாலையில் நிலுவையில் உள்ளது.இந்நிலையிலேயே இந்திய அதிகாரிகள் அங்கு சென்று சம்பவம் தொடர்பிலும் இந்தியக் கைதிகளின் நலன் குறித்தும் விசாரித்து அறிந்து கொண்டதுடன் கைதிகளின் நிலை குறித்து விசாரணைனளை மேற்கொண்டுள்ளனர்.