புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2012


ஐ.நா. சபையின் வன்னி அவலம் மீதான இரகசிய அறிக்கை: அடுத்தது என்ன?
ஐ.நா. சபையின் வன்னி அவலம் மீதான இரகசிய அறிக்கை தொடர்பில் அடுத்தது என்ன என்ற கருத்துக்களமும் கலந்துரையாடலும் நேற்று மாலை கனடிய தமிழர் பேரவை ஏற்பாட்டில் ஸ்காபரோ நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் சட்ட ஆலோசகர் கரி ஆனந்தசங்கரி, பேராசிரியர் சேரன், முன் நாள் பிபிசி ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹரிசன், திருமதி பீற்றி ஆனசுராட் ஆகியோர் கலந்து கொண்டு ஐ.நா. சபையின் வன்னி அவலம் மீதான அகநிலை அறிக்கை தொடர்பான கருத்துக்களையும் நடந்து முடிந்த வன்னி போர், அதன் தாக்கம், உலக அளவில் இந்த அவலம் கண்டுகொள்ளப்படாத காரணங்கள், இப்பொழுது ஐ.நா. சபையின் அறிக்கை போன்ற பல வாத பிரதிவாதங்களை முன்னிறுத்தி இவர்களின் கருத்துக்கள் அமைந்திருந்தன.
கனடிய தமிழர் பேரவை சட்ட ஆலோசகர் கரி ஆனந்தசங்கரி உரையாற்றுகையில், ஐ.நா. சபை இந்த அவலத்தை தடுக்க தவறி இருப்பினும், ஐ.நா. இப்பொழுது எடுத்து செயல்படும் தற்போதைய ஆரோக்கியமான நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்.
பேராசிரியர் சேரனுடைய கருத்தில், புலம்பெயர் தமிழர் கடமைகளையும், தாயகத்தில் இருப்பவர்கள் நிலைப்பாட்டையும், உலக அளவில் எமக்காக குரல் கொடுக்க கூடிய மற்றைய சமூகத்தினுடைய பங்களிப்பையும், அதை நாம் உருவாக்க வேண்டிய காரணத்தையும் தனது கருத்தில் முன்வைத்தார்.
சாவுகள் இன்னமும் எண்ணப்படுகின்றன என்ற நூலை வெளியிட்ட முன்னாள் பி.பி.சி. நிருபர் மற்றும் எழுத்தாளர் பிரான்சிஸ் ஹரிசன் தனது கருத்தில் சாட்சிகள் இல்லாமல் வன்னி போர் நடந்ததையும், ஐ.நா. பணியாளர்கள் வன்னி பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்டத்தையும் இப்பொழுது ஐ.நா. பல சாட்சிகளை சேகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். தமிழர் சமுகம் மேலும் செய்யவேண்டிய பணிகள் பற்றியும் பேசினார்.
“மௌனிக்கப்பட்ட குரல்கள் – சிறிலங்கா ஊடகவியலாளரின் புலம்பெயர் வாழ்வு” என்ற ஆவணத் திரைப்படத்தை இயக்கிய திருமதி பீற்றி ஆனசுராட் தனது கருத்தில் தமிழர் சமுகம் மீதும் அதற்காக குரல் கொடுபவர்கள் மீதும் ஸ்ரீலங்கா அரசாங்கம் கால காலமாக குத்தும் புலி பயங்கரவாத முத்திரையை நாம் நீக்க வேண்டும் என்றும் இப்படியாகவே ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழ் மக்களையும், சர்வதேச சமுகத்தையும் திசைதிருப்பி தனது தமிழ் இனத்தின் மீதான அடக்கு முறையை நடத்தியிருப்பதை விளக்கினார்.
பலரின் கேள்விகளுக்குப் பதிலளித்த இயக்குனர் திருமதி பீற்றி ஆனசுராட், சிங்களம் உட்பட வேறு பல மொழிகளில் இத்திரைப்படம் மொழி மாற்றம் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த கருத்துகளத்தை கனடியத் தமிழர் பேரவையின் சார்பில் பிறகல் நெறிப்படுத்தினார்.

ad

ad