புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2012


 சூரிச் மற்றும் லுசேர்ன் மாநிலங்களிலிருந்து கோத்தாட் ஊடாக இத்தாலி மற்றும் திச்சினோ மாநிலத்திற்கு செல்லும் புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஊரி மாநிலத்தில் உள்ள கோத்தாட் பகுதியில் மலை உடைந்து பாரிய கல் ஒன்று அந்த மலை அருகாக செல்லும் புகையிரத பாதையில் விழுந்துள்ளது. இதனால் புகையிரத பாதை சேதமடைந்துள்ளதுடன் சூரிச் மற்றும் லுசேர்ன் மாநிலங்களிலிருந்து
கோத்தாட் ஊடாக இத்தாலி மற்றும் திச்சினோ மாநிலத்திற்கு செல்லும் புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை மாலை 4.30மணியளவில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. பாரிய இக்கல் புகையிரத பாதையில் விழுந்ததை அடுத்து உடனடியாக எச்சரிக்கை மணி அடித்ததாகவும் இரு பக்கங்களிலும் இருந்து வந்த புகையிரதங்கள் நிறுத்தப்பட்டதாகவும் சுவிஸ் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த யூன் 5ஆம் திகதியும் இதே இடத்தில் பெரிய கல் ஒன்று மலையிலிருந்து விழுந்ததால் புகையிரத பாதை சேதம் அடைந்து சுமார் ஒரு மாதகாலமாக திருத்த வேலைகள் நடைபெற்று சேவை வழமைக்கு திரும்பியிருந்தது.  நேற்று அதே இடத்தில் மலை உடைந்து பாரிய கல் ஒன்று விழுந்துள்ளது. மலையிலிருந்து கல் விழாமல் தடுக்கும் வகையில் கம்பியிலான வலைகள் மலையில் பொருத்தப்பட்டிருக்கின்ற போதிலும் அந்த கம்பி வலைகளையும் சேதப்படுத்தி கொண்டு இந்த பாரிய கல் புகையிரத பாதையில் விழுந்துள்ளது. புகையிரதம் செல்லும் போது இக்கல் விழுந்திருந்தால் உயிர்சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருத்த வேலைகள் இன்று காலை ஆரம்பமாகியுள்ள, திங்கட்கிழமை திருத்த வேலைகள் நிறைவடைந்து புகையிரத சேவை வழமைக்கு திரும்பும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  சூரிச் மற்றும் லுசேனிலிருந்து செல்லும் பிரயாணிகள் ப்லுலென் என்ற இடத்திலிருந்து பஸ்களில் ஏற்றி செல்லப்பட்டு கொசேனன் என்ற இடத்திலிருந்து பயணத்தை தொடர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கென 16பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் இத்தாலி மற்றும் திச்சினோ செல்லும் பிரயாணிகள் ஒரு மணி நேரத்தை மேலதிகமாக செலவிட வேண்டி ஏற்படும் என புகையிரத திணைக்கள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



ad

ad