புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2012


விநாயகம் கைது செய்யப்படவில்லை! பிரென்சு காவல்துறை வட்டாரங்கள் தெரிவிப்பு
விடுதலைப் புலிகளின் முத்த தளபதி பரிதி படுகொலை தொடர்பில் விநாயகம் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் எதுவித உண்மையும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி விநாயகம் கைது செய்யப்படவில்லை என பிரென்சு காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பரிதி படுகொலை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இவ்விருவரைத் தவிர இப்படுகொலை சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அண்மையில் பிரான்சில் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் பரிதி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தோடு எமது அமைப்பைத் தொடர்புபடுத்தி சில விஷமிகளால் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்த எவருமே இக்கொலையோடு தொடர்புபடவில்லை என்பதையும் எமது அமைப்பைச் சேர்ந்த எவருமே பிரான்சில் கைது செய்யப்படவில்லை என்பதையும் தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் தெளிவுபடுத்துகின்றோம் என தலைமைச் செயலக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டும் உள்ளது.
இதேவேளை, பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் உட்டப இப்படுகொலை தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் விசாரணைகளையே காவல்துறை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் பரிதி அவர்களது படுகொலை வைத்து பரபரப்பு ஏறபடுத்தும் நோக்கில் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவது அல்லது விசாரணைகள் நடபெற்று வரும் நிலையில் பிறர் மீது பழிகளை சுமத்துவதை நிறுத்தி மக்களை மேலும் மேலும் குழப்பாது பொறுப்புடன் எல்லோரும் நடக்வேண்டிய தருணம் இதுவென சமூக ஆர்வலர்கள் பலரது கருத்தாகவுள்ளது.

ad

ad