செவ்வாய், நவம்பர் 13, 2012


குவைத்தில் தகாத உறவு வைத்திருந்த இலங்கைப் பெண்-இந்திய சாரதி கைது
குவைத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்யும் இலங்கைப் பெண்ணொருவர் இந்திய சாரதியொருவருடன் தகாத உறவை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரின் தொடர்பு குறித்து குவைத் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்தே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைப் பெண் தான் வேலை செய்யும் வீட்டுக்கு, அயல் வீட்டில் சாரதியாக வேலைபார்க்கும் இந்தியர் ஒருவருடனேயே தொடர்பு வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குவைத் பொலிஸார் இருவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது இருவரும் தமது குற்றத்தினை ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக குவைத் பொலிஸார் வழக்கு தொடரவுள்ளனர் என்று அரூம் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.