புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2012


கேணல் பரிதி அவர்களின் வித்துடல்  (26.11.2012) திங்கட்கிழமை காலை  Cimetiere à Pantin 164 av Jean Jaurès 93500 PANTIN என்ற முகவரியில் அமைந்துள்ள லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரின் நினைவுக் கல்லறைகள் அமைந்துள்ள துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்ட புனித விதைகுழியில் பெருமளவான மக்களின் கண்ணீர் காணிக்கையுடன் விதைக்கப்பட்டது.
காலை 10 மணிக்கு கேணல் பரிதி அவர்களின் வித்துடல் அணிவகுப்பு மரியாதையுடன் எடுத்துவரப்பட்டு, மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதன்போது பெருமெண்ணிக்கையான மக்கள் உணர்வு பொங்க தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.
அனைவரும் இறுதி அஞ்சலியைச் செலுத்தியதைத் தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் வித்துடல் புனித விதைகுழியில் விதைக்கப்பட்டது.
தொடர்ந்து, இவர் விட்டுச்சென்ற பணியை நாம் தொடர்வோம் என அங்கு உறுதி எடுக்கப்பட்ட அதேவேளை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் 27.11.2012 செவ்வாய்க்கிழமை Viparis – Villepinte Hall 8 – Parc des Expositions (RER B)  என்ற முகவரியில் 12.35 மணிக்கு இடம்பெறும் மாவீர்தினத்தில் அனைவரும் உணர்வுடன் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு, தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிறைவுபெற்றது.


ad

ad