செவ்வாய், நவம்பர் 13, 2012


eelamboys .net  thax


விடுதலைப்புலி தளபதி பரிதி கொலை: பிரான்ஸ் போலீஸ் பிடித்த Ménilmontant இலங்கை நபர்!

விடுதலைப் புலிகள் பரிதி கொலை தொடர்பாக இரு சந்தேக நபர்களிடம் விசாரணை நடைபெறுகிறது என்பதை பிரான்ஸ் போலீஸ் உறுதி செய்துள்ளது DCRI (Direction Centrale du Renseignement Intérieur). இந்த இருவரும் தற்போது பிரான்ஸ் போலீஸால் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்று தெரியவருகிறது.
பிரான்ஸ் போலீஸ் DCRI பிரிவை தொடர்பு கொண்டபோது செய்தி தொடர்பாளர் Noella Andrade, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களின் அடையாளங்கள் பற்றிய தகவல்களை வெளியிட மறுத்துள்ளார். “இருவரில் ஒருவர் இலங்கையை பிறப்பிடமாக கொண்டவர். பரிதி சார்ந்த அமைப்பை சேர்ந்தவர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மற்றொருவர் விசாரணை செய்யப்படுகிறார்”
என்றார்.
‘பரிதி சார்ந்த அமைப்பை சேர்ந்தவர்’ என்றால், விடுதலைப் புலிகள் அமைப்பா? அல்லது விடுதலைப்புலிகள் அமைப்பிலுள்ள ‘நெடியவன் பிரிவா?’ என்று கேட்ட கேள்விக்கும் பதில் கூற மறுத்தார் Noella Andrade.
“இதில் பாகிஸ்தான் உளவுத்துறை தொடர்பு உள்ளதாக பிரான்ஸ் தமிழ் அமைப்பு ஒன்று அறிக்கை விட்டுள்ளதே” என்று கேட்டபோது, “அந்த அறிக்கை தொடர்பான தகவல் ஏதும் எம்மிடம் இல்லை” என்றார் அவர்.
இதற்கிடையே, பிரென்ச் பத்திரிகை Le Parisien, “பாரிஸ் 20-ம் வட்டத்தை (20th arrondissement of Paris) சேர்ந்த இலங்கையை பிறப்பிடமாக கொண்ட 33 வயதான ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த கைது நேற்று முன்தினம் நடைபெற்றது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மற்றொருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
(Un homme a été arrêté, ce dimanche 11 novembre, après le meurtre d’un leader des Tigres tamouls, le 8 novembre, vers 21 h 30, dans le XXe arrondissement à Paris. Le suspect, âgé de 33 ans, de nationalité sri-lankaise a été interpellé par les enquêteurs de la brigade criminelle.
Selon une source proche de la victime, un deuxième suspect aurait été appréhendé, toujours ce dimanche 11 novembre, à Paris avant d’être placé en garde à vue.
Le soir des faits, Nadarajah Mathinthiran, 49 ans avait été abattu de trois balles de calibre 9 mm dans le dos, alors qu’il sortait du local du Comité de coordination des tamouls de France (CCTF), rue des Pyrénées.)
பாரிஸின் Arrondissement de Ménilmontant பகுதியில் கைது செய்யப்பட்ட நபரும், DCRI செய்தி தொடர்பாளர் கூறும் நபரும் ஒரே ஆளாக இருக்க வேண்டும். இந்த நபர் பரிதியின் நடமாட்டம் பற்றிய தகவல் கொடுத்த சந்தேக நபரா, அல்லது கொலையில் நேரடியாக சம்மந்தப்பட்ட சந்தேக நபரா என்று தெரியவில்லை.

பணத்துக்கு மாரடிக்கும் கூட்டத்தை சேர்ந்தவர்களே என்பது நிதர்சனம் ஆகின்றது