புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2012

FULL SCORE CARD-இங்கிலாந்து அணியின் கேப்டன் அலெஸ்டர் குக் சதமடித்தார். அவர் 112 ரன்களுடன் களத்தில் உள்ளார்
இந்திய "ஏ' அணியுடனான பயிற்சி ஆட்டத்தின் 2ஆம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணிக்கு, இந்திய ஏ அணியின் ஸ்கோரை எட்ட இன்னும் 83 ரன்கள் தேவைப்படுகின்றன.மும்பையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய ஏ அணி முதல் நாள் முடிவில் 9
விக்கெட்டுகளை இழந்து 369 ரன்கள் எடுத்திருந்தது. புதன்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணி மேலும் ஒரு ரன் கூட எடுக்காமல் கடைசி விக்கெட்டையும் இழந்தது.
 நிதான ஆட்டம்: பின்னர் முதல் இன்னிங்ûஸத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி அளித்தனர் இந்திய பந்து வீச்சாளர்கள். அணியின் ஸ்கோர் 2 ஆக இருந்தபோது காம்ப்டன் விக்கெட்டை இழந்தது. அவர் டக் அவுட் ஆனார். அவரது விக்கெட்டை திண்டா கைப்பற்றினார். பின்னர் பேட் செய்ய வந்த ட்ராட்டுடன் குக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியை இந்திய பந்து வீச்சாளர்கள் அச்சுறுத்தி வந்தாலும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதனால் அணியின் ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது. ஸ்கோர் 97 ஆக இருந்தபோது அரைசதமடித்திருந்த ட்ராட் ஆட்டமிழந்தார். அவர் 95 பந்தில் 56 ரன்கள் எடுத்திருந்தார்.
 அடுத்து பேட் செய்ய வந்த கெவின் பீட்டர்சன் ஒரு நாள் போட்டியைப் போல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவரை விரைவிலேயே பந்து வீச்சாளர்கள் வெளியேற்றினர். அவர், 24 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த இயான் பெல் 5 ரன்களில் வெளியேற இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 133 ரன்கள் என்ற இக்கட்டான நிலையில் இருந்தது.
 குக் சதம்: ஒருபுறம் அவ்வப்போது விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் கேப்டன் குக் இந்திய அணியினருக்கு சோதனை தந்தார். இவருடன் பட்டேல் இணைந்தார். இந்த ஜோடி மெதுவாக ஆடினாலும் அணியின் ரன் விகிதத்தை உயர்த்தியது.
 இந்த ஜோடியைப் பிரிக்க கேப்டன் சுரேஷ் ரெய்னா பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டபோதும் அதற்கு பலன் கிட்டவில்லை. முரளி விஜய் உள்பட பலர் பந்து வீசினர். எந்த பந்து வீச்சாளருக்கும் அஞ்சாமல் இந்த ஜோடி சிறப்பான ஷாட்களை தேர்ந்தெடுத்து ஆடியது. அதன் பலனாக குக் சதத்தையும், பட்டேல் அரை சதத்தையும் கடந்தனர்.
 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்துள்ளது. ஆட்டமிழக்காமல் குக் 112 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 251 பந்துகளில் 13 பவுண்டரிகளின் உதவியுடன் இந்த ரன்களை எடுத்தார். பட்டேல் 145 பந்துகளில் 12 பவுண்டரிகளை விளாசி 82 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். 5 ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 153 ரன்களை எடுத்துள்ளது.
 இந்தியத் தரப்பில் யுவராஜ் சிங் 52 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் திண்டா, சுரேஷ் ரெய்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 3ஆவது நாள் ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதியுள்ளது. முதல் இன்னிங்ஸ் ஆட்டமே முடிவுக்கு வராததால், இந்த ஆட்டம் வெற்றி, தோல்வியில்லாமல் டிரா ஆகும் என்று தெரிகிறது.
 சுருக்கமான ஸ்கோர்
 இந்தியா "ஏ'-369 
 (திவாரி 93, முகுந்த் 73,
 பிரஸ்னன் 59/3,
 ஸ்வான் 90/3)
 இங்கிலாந்து-286/4
 (குக் 112*, பட்டேல் 82*,
 யுவராஜ் சிங் 52/2)

India A 369
England XI 286/4 (87.0 ov)
England XI trail by 83 runs with 6 wickets remaining in the 1st innings

Stumps - Day 2
India A 1st inningsRMB4s6sSR
A Mukundc Bell b Swann731208316087.95
M Vijayrun out (Bresnan)739191036.84
AM Rahanec Pietersen b Bresnan442191021.05
Yuvraj Singhst †Prior b Swann5999807473.75
SK Raina*c Bell b Patel2036323062.50
MK Tiwaryb Bresnan9320215012062.00
WP Sahalbw b Anderson2017214095.23
IK Pathanlbw b Swann46113835255.42
R Vinay Kumarlbw b Anderson2566342173.52
AB Dindab Bresnan021000.00
P Awananot out1119192057.89
Extras(b 1, lb 9, w 1)11
Total(all out; 90.1 overs; 381 mins)369(4.09 runs per over)
Fall of wickets 1-25 (Vijay, 7.4 ov)2-57 (Rahane, 15.1 ov)3-113 (Mukund, 24.5 ov)4-140 (Raina, 35.3 ov),5-168 (Yuvraj Singh, 42.4 ov)6-190 (Saha, 46.6 ov)7-300 (Pathan, 74.6 ov)8-347 (Tiwary, 85.1 ov),9-347 (Dinda, 85.2 ov)10-369 (Vinay Kumar, 90.1 ov)
BowlingOMRWEcon
JM Anderson17.146523.78(1w)
ST Finn412205.50
TT Bresnan2065932.95
IJL Trott502104.20
GP Swann2369033.91
SR Patel2049514.75
KP Pietersen10707.00
England XI 1st inningsRMB4s6sSR
AN Cook*not out11225113044.62
NRD Comptonc †Saha b Dinda073000.00
IJL Trottb Raina56118959058.94
KP Pietersenc & b Yuvraj Singh2323243195.83
IR Bellc Raina b Yuvraj Singh51061083.33
SR Patelnot out8214512056.55
Extras(b 1, lb 4, w 1, nb 2)8
Total(4 wickets; 87 overs)286(3.28 runs per over)
To bat JM AndersonST FinnMJ Prior†, GP SwannTT Bresnan
Fall of wickets 1-2 (Compton, 1.3 ov)2-97 (Trott, 29.2 ov)3-125 (Pietersen, 35.3 ov)4-133 (Bell, 37.6 ov)
BowlingOMRWEcon
IK Pathan1334503.46(2nb)
AB Dinda1624612.87(1w)
Yuvraj Singh1615223.25
R Vinay Kumar1213502.91
P Awana813204.00
MK Tiwary402305.75
SK Raina1624312.68
M Vijay20502.50
Match details
Toss India A, who chose to bat
Umpires S Asnani and SK Tarapore
Match referee S Sharath
Close of play
Tue, 30 Oct- day 1 - India A 1st innings 369/9 (R Vinay Kumar 25*P Awana 11*90 ov)
Wed, 31 Oct- day 2 - England XI 1st innings 286/4 (AN Cook 112*SR Patel 82*87 ov)

ad

ad