புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2012



(Official Announcement) இளையராஜாவின் ரொறான்ரோ இன்னிசை நிகழ்ச்சி தள்ளி வைப்பு!

 வருகிற நவம்பர் 3ஆம் தேதி ரொறான்ரோவில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. இப்போது அந்த நிகழ்ச்சி தள்ளி வைக்கப்படுவதாக நிகழ்ச்சி அமைப்பாளர்களான டிரினிடி ஈவண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘தென்னிந்தியாவில் கடுமையான புயல் மழை என்று வானிலை மோசமாக இருக்கிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.தமிழகத்தில் பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் கனடா இசை நிகழ்ச்சிக்கு வர வேண்டிய கலைஞர்களின் பயணம் தடைப்பட்டுள்ளது. இதனால் இந்த இசை நிகழ்ச்சியைத் தள்ளிவைக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது’ என்று ஈக்குருவியிடம் பேசிய கிஷன் நித்தி. இவர் டிரினிடி ஈவெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் பத்திரிகை தொடர்பாளர்.
நுழைவுச் சீட்டு வாங்கிய ரசிகர்கள் அந்த நுழைவுச் சீட்டை புதிய தேதி அறிவிக்கப்படும் போது அந்த நிகழ்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவிக்கிறார். நுழைவுச் சீட்டுக்கான பணத்தை திரும்பப் பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதனால் ரசிகர்கள் கவலைக் கொள்ள வேண்டாம் என்றும் சொல்லுகிறார் நித்தி.

‘எங்கு, எப்படி  நுழைவுச் சீட்டுக்கான பணத்தை திரும்பப் பெறுவது  என்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.’ என்று கூறும் கிஷன் நித்தி, வெகு சீக்கிரமே ஒரு நிகழ்ச்சியை வழங்கி ரசிகர்களை மகிழ்விப்போம் என்றும் தெரிவிக்கிறார். 

இந்த நிகழ்ச்சி தள்ளிப் போவதற்கு சென்னையில் நிலவும் மோசமான வானிலைதான் காரணமே தவிர வேறு காரணங்கள் இல்லை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழுத்தமாக கூறுகிறார்கள். 

மிக விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என்று அவர்களிடம் பேசியதிலிருந்து தெரிகிறது.

ad

ad