புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2012

லங்காசிறி-thx
எம் இனத்தின் விடுதலைக்கான புதிய பாதைகளை அமைத்துக் கொள்ளும் வழியாக அமைந்துள்ளது: உலகத் தமிழர் மாநாடு குறித்து பா.உ சிறீதரன்-
லண்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், லங்காசிறி இணையத்தளத்திற்கு பிரத்தியேகமாக வழங்கிய செவ்வி பின்வருமாறு
,
உலகத் தமிழர் மாநாட்டில் இலங்கையிலே அதாவது தமிழர் வாழுகின்ற வன்னிப் பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் மக்களின் நிலை தொடர்பாகவும் தமிழ் மக்கள் மீது தொடர்ந்து 60ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த இனப்படுகொலை தொடர்பாகவும் ஒரு சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படும் என்ற தீர்மானம் இன்ற ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நாடுகளுடைய குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த பாராளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர் நாடுகிளில் உள்ள தமிழர் பிரதிநதிகள் அனைவருமாகச் சேர்ந்து இத்தீர்மானத்தை மேற்கொண்டிருந்தார்கள்.
தமிழர்களின் விடுதலை என்பதும் தமிழர்களுக்கான எதிராகால வாழ்வு என்பதும் ஸ்தம்பிக்கப்பட்ட நிலையில் உள்ளது. தமிழர்களுக்கு ஒரு தீர்வுகளையும் வழங்காது இலங்கை அரசாங்கத்தினால் இழுத்தடிக்கப்படுகின்ற சூழலில் புலம்பெயர் தமிழர்களின் பலம் என்பது மிக முக்கியமானதாகும்.
இன்று புலம்பெயர் தமிழர்களும் மௌனிக்கப்படுகின்ற ஒரு சூழலிலும், இலங்கையில் வாழுகின்ற தமிழர்கள் இராணுவக் கெடுபிடியிலும் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டிலும் தங்களது  வாய்களைத் திறக்க முடியாமல் மௌனமாக்கப்பட்டுள்ளனர். எங்களுடைய போராட்டம் என்பது உலகத்தினால்தான் தடுத்து நிறுத்தப்பட்டது.  ஆகவே உலகம் இன்ற பதிலைச் சொல்ல வேண்டிய தேவை இருதுக்கின்றது.
தற்போது இலங்கையில் படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பில் ஐ.நாவில் விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. வரும் மார்ச் மாதமளவில் அதற்கான இறுதித் தீர்மானம் எட்டக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
ஆகவே இந்த நிலையில் உலகமெல்லாம் வாழுகின்ற தமிழர்கள் எல்லாம் ஒன்றிணைந்து ஏகமனதாக ஒரு முடிவை எடுக்க வேண்டிய காலகட்டத்தில் தள்ளப்பட்டுள்ளோம்.
இலங்கையிலிருந்து த.தே. கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான  மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சீ. யோகேஸ்வரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, ஆகியோர் இம்மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.
அதேபோல் தமிழ் நாட்டிலிருந்து பல தமிழ்  அரசியல் கட்சிகளின் தலைவர்கள் குறிப்பாக, திமுகவின் பொருளாளர் ஸ்டாலின், டி.ஆர்.பாலு, தொல்.திருமாவளவன், புதிய தமிழகம் கட்சியினுடைய டொக்டர் கிருஸ்ணசாமி, நாம் தமிழர் கட்சியினுடைய ஐயாநாதன் மற்றும் பல கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இங்கு வருகை தந்துள்ளார்கள். இலங்கையிலிருந்து சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களும் இங்கு வருகை தந்துள்ளனர்.
உலக அளவில் ஈழத் தமிழர்களுடைய பிரச்சினை தொடர்பாக, அவர்களுடைய இன்னல் தொடர்பாக சிங்கள மக்களால் தமிழர்கள் கொலை செய்யப்பட்டார்கள். இலங்கையில் நடைபெற்றது இன அழிப்பு என்ற உண்மையை உலகத்தின் கண்களுக்கு உரக்கச் சொல்வதற்கு ஒரு சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.
அத்துடன் முதல் தடவையாக தமிழ் நாட்டுத் தலைவர்களும் ஈழத்தமிழர்களும் புலம்பெயர்தமிழர் தலைவர்களும் ஒரு இடத்தில் சந்தித்து எடுக்கப்பட்ட முதல் தீர்மானமாக இது அமைந்துள்ளது
என்னுடைய தனிப்பட்ட கருத்து என்ற வகையில், இந்த மாநாடானது நல்ல முடிவை எட்டக் கூடியது. நல்லதொரு எதிர்காலத்தை நோக்கிய நகர்வாக இன்றோ நாளையோ தீர்க்கப்படும் பிரச்சினைக்கானதல்ல.
நீண்ட கால அடிப்படையில் எங்களுடைய இளைய சமுதாயத்தினுடைய கரங்களில் ஒப்படைக்கப்படும் போராட்டத்தின் ஒரு வடிவமாக புலம்பெயர் நாடுகளில் வாழும் பதிய தலைமுறைகள் இணைந்து எம் இனத்தின் விடுதலைக்கான புதிய பாதைகளை அமைத்துக் கொள்வதற்காக வழியாக இது அமைந்துள்ளது.
மிக முக்கியமாக தமிழர்கள் சோர்ந்து போகக் கூடாது. நாங்கள் இப்படியே செய்து எதைக் கண்டோம் அந்த உணர்வுகளை கிடப்பிலே போட்டுவிட்டு. தமிழன் தமிழனாக பேசுகிறபோது, நாம் நம்முடைய உணர்வுகளை தட்டிவிட்டு பேசத் தயாராகின்ற போது, போராடத் தயாராகின்ற போது விடுதலை கிடைக்கும். போராட எந்த இனமும் விடுதலை பெற்றதாக வரலாறு இல்லை என தெரிவித்தார்.

ad

ad