புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2012


Yogeshwaran Velu
Friday
ஆனந்த விகடனின் உண்மை முகம் எது?

*********************************************
அன்பர்களே..அருளினியன் என்பவர் ஆனந்த விகடனில் எழுதிய 'விபச்சாரியாக மாறிய முன்னாள் போராளியின் கதையை' ஒரு நண்பர் சிறிது நேரத்துக்கு முன்புத
ான் எனது முகநூல் சுவரில் பதிவு செய்திருந்தார்.அவருக்கு முதலில் நன்றி.அந்த குறிப்பிட்டபெண்ணின் பேட்டியை முழுவதுமாகப் படித்தேன்.அதிலிருந்து நான் புரிந்து கொண்ட சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து
கொள்ள விரும்புகிறேன்.
(1) அவர்கள் குறிப்பிடும் வித்யாராணி என்னும் பெயர் அவர்களால் உருவாக்கப் பட்ட பெயர்..
இதை அவர்களே (எடுக்கப்பட்ட)பேடடியின் இறுதியில் கூறியுள்ளனர்.எனவே சில மகளிர் அமைப்பை சேர்ந்த சில முன்னாள் போராளிகள்மூலம் இதனை உறுதிப் படுத்த வேண்டிய அவசியம் எழவில்லை.ஆனந்த விகடனின் கற்பனைப் பெயருக்கு நாம் ஏன் அப்படி அலட்டிக் கொள்வது?ஒரு பெண் போராளியின் உண்மை விபரத்தை குறிப்பிட்டால்தானே அதுபற்றி விசாரித்து அறியமுடியும்.எனவே
சிருஷ்டிக்கப் பட்ட ஒரு புனை கதை என்றுகூட இதை எடுத்துக் கொள்ள வாய்ப்புகள் அதிகம்.அடுத்து இதே வார இதழில்தான் முன்பு ஒரு பெண் கவிஞரின் கட்டுரை வந்தது.என்று நான் பார்த்த ஞாபகம் உண்டு.அதில்,முள்ளிவாய்க்கால் சண்டையின்போது தலைவர் இறுதிக் கட்டத்தில் கடற்கரை வழியாக நாய்களுடன் போனதாக அந்தக் கவிஞர் கண்டதாக எழுதியிருந்தார்கள்.ஆனால் இந்த பேட்டியில்"
ஈழப்போர் வெடிக்கும்..பிரபாகரன் திரும்பி வருவார்..என்றெல்லாம் சும்மா எழுதிக் கொழுத்திப் போடுகிறார்கள்' என்று அந்தப் பெண் சொன்னதாக ஒரு வரி வருகிறது.இது ஆனந்த விகடனில் வந்த வரிகள் என்றால்,அந்தப் பெண் கவிஞர் இறுதி நேரத்தில் கடற்கரையில் சில நாய்களுடன் தலைவர் போனதைக் கண்டதாகச் சொன்ன பேட்டி வந்தது ஆனதவிகடன் என்று உறுதி செய்யப் படுமானால்..இரண்டு
சம்பவங்களும் வித்தியாசப் படுகின்றனவே.அங்கே இறுதிக் கட்டத்தில் நாய்களுடன் போன தலைவரையும், இங்கே அந்த பெண்,தலைவர் உயிருடன் இல்லை என்பதுபோன்ற ஒரு தோற்றத்தையும் கொண்ட செய்தியிலும் எது உண்மை? எது பொய்?அந்தப் பேட்டி ஆனந்தவிகடனில் வரவில்லைஎன்றால் அதை விட்டுவிடலாம்..
இதில் இன்னும் ஒரு விடயத்தையும் அந்தப் பெண் கூறியிருப்பதாக ஆனந்த விகடன் குறிப்பிடுகிறது..
(2)அதாவது, ஆனந்த புரத்தில் இரசாயனக் குண்டடிபட்டு இறந்த 700 போராளிகளுள் அவரும் ஒருவர் என்று தனது கணவனைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.இரசாயனக் குண்டுகள் ஈழ யுத்தத்தில் பாவிக்கப் படவில்லை என்று அடித்து சொல்லிக் கொண்டிருக்கும் சிங்கள அரசுக்கு எதிராக இந்தப் பெண்ணின் வாக்கு மூலத்தை உண்மையான ஒரு பொது நல நோக்கத்தோடு ஏன் ஆனந்த விகடன் பயன் படுத்தி இருக்கக் கூடாது?ஒரு வெள்ளைத் தோல் சணல் நான்கு தொலைக்காட்சி சிங்கள அரசின் மனிதப் படுகொலை பற்றி வெளிப்படுத்த முடியுமாயின் தமிழர்களால் பிழைக்கும் ஆனந்த விகடன் அதை செய்யாமல் விட்டது ஏன்..? எனவே ஆனந்த விகடனின் நோக்கம் வேறு எதோ ஒன்றை வெளிக்கொணர முயல்வது மட்டுமே..எதேச்சாதி காரத்துக்கு
எதிராக குரல் கொடுக்க அல்ல என்பது
புலனாகிறது.
(3)அழகான போராளிப் பெண்கள் சிங்கள ராணுவ உயர் அதிகாரிகளால் என் கண்முன்னே கற்பழிக்கப் பட்டனர் என்று குரிப்பிடுமந்த பெண் ஏன் ஒரு சில அதிகாளிகளின் பெயரையாவது குறிப்பிட மறந்தார்?அல்லது அப்படி அவர் குறிப்பிட்டும்கூட ஆனந்த விகடன் அதை எழுத மறந்தது ஏன்?..ஒருவரின் பெயர்கூட அவரின் பெயரை தாங்கிய பட்டியில்
இருந்து கிடைக்கவில்லையா?
(4) அடுத்து ஒரு சிங்கள அமைச்சரும் சில போராளிகளை கற்பழித்ததாக ஆனந்த விகடன் எழுதுகிறது.அது உண்மை என்றால் அவரின் பெயரை வெளிக் கொணரவில்லை..ஏன்?..ஒரு போராளி
விபச்சாரி ஆன விடயத்தை மட்டும் வெளிக்கொணர்வதுதான் ஆனந்த விகடனின் சமூகப் பணியா? ஒரு நாட்டின் அமைச்சரே கற்பழிப்பு குற்றம் செய்திருந்தபோது அவரின் பெயரை வெளிப்படுத்தாமல் இருப்பது எந்தவிதத்தில் ஒரு சமூகப் பனி ஆகும்? இதை வெளிப்படுத்தியிருந்தால் இன்று இந்த விடயம் ஐக்கிய நாடுகள் சபையின் மணித் மனித உரிமை ஆணையத்தின் முன் அரங்கேறி இருக்குமே.? ஏன் செய்யவில்லை?
(5)..அந்தப்பெண் இப்படியும் சொன்னதாக ஆனந்த விகடன் எழுதியுள்ளது.."இந்தியத் தலைவர்களே..உங்களைக் கைகூப்பி தொழுகிறேன்..எங்களைவைத்து
வியாபாரம் செய்வதை இனியாவது நிறுத்துங்கள்" என்று..
சிலவேளை காங்கிரஸ் அரசுக்கு ஈழப் போராளிகளை ஆதரிக்கும் குழுக்கள் அச்சுறுத்தலாகி வருகின்றன போலும்?.அல்லது
ஆரியத்தை காப்பாற்ற ஒட்டுமொத்த ஈழ ஆதரவுக் குழுக்கள்மீதும் கரிபூசும் முயற்சியில் ஒரு பெண் உருவாக்கப்பட்டாளா..? அதன்மூலம் முன்னாள் பெண் போராளிகளுக்கும் சேறுபூச முனைகிறதா ஆனந்த விகடன்?போராட்டம் மீண்டும் முளை விடுவதை கண்டு பொறுக்க முடியாத ஒரு குரலின் ஆற்றாமை குரல் என்று கூட இதை எடுத்துக் கொள்ளலாமா?எது எப்படி இருந்தபோதும் ஒரு சமூகப் பொறுப்பில் இருந்து ஆனந்தவிகடன் நழுவிக்கொண்டிருக்கிறது என்பதையே இந்த
கதையின் அடிநாதம் எடுத்துரைக்கிறது என்றே எனக்கு
தோன்றுகிறது..சினிமா..விபச்சாரம், இவைபற்றி எழுதுவதும் விற்பனையை பெருக்குவதும் தமிழ் நாட்டு சஞ்சிகைகள் சிலவற்றுக்கு கை வந்த கலை ஆயிற்றே..? இதை நம்புவதும் நம்பாததும் தமிழர்களின் பணி!..
பிற் குறிப்பு;
அன்பர்களே..மேற்படி கட்டுரைக்கு இதுவரை எதிர்ப்போ மறுப்போ யாரிடமும் இருந்தும் வரவில்லை.எனவே ஆனந்த விகடன் செய்தது சமூகப் பொறுப்பற்ற செயலே என்பது இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது..பெண் போராளிகளையும்,
போராளி அமைப்புகளுக்கு ஆதரவு
தெரிவிக்கும் அமைப்புகளையும், நீண்ட காலமாக போராடிவரும் விடுதலைப் புலிகள் அமைப்பையும் களங்கப் படுத்த முயலும் ஆனந்த விகடன் பத்திரிக்கை இனியும் தமிழ் நாட்டில் இருந்து வரவேண்டுமா..? என்பதை தமிழ் நாட்டு அன்பர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்..தீர்மானிக்க வேண்டிய நேரமும் இதுதான்.
அன்புடன்,
மு.வே.யோகேஸ்வரன்.
 — with Govind Samy and 48 others.
1Like ·  · 
  • 25 people like this.
  • கணபதி பாலு விளக்கத்துக்கு நன்றி வந்தேறிகள் என்றுதான் திருந்துவார்களோ
  • Arun Prasath velu anna - thalaivar pathi ungalaku therinja matter solunga
  • Arun Josep அழகான போராளிப் பெண்கள் சிங்கள ராணுவ உயர் அதிகாரிகளால் என் கண்முன்னே கற்பழிக்கப் பட்டனர் என்று குரிப்பிடுமந்த பெண் ஏன் ஒரு சில அதிகாளிகளின் பெயரையாவது குறிப்பிட மறந்தார்?அல்லது அப்படி அவர் குறிப்பிட்டும்கூட ஆனந்த விகடன் அதை எழுத மறந்தது ஏன்?..ஒருவரின் பெயர்கூட அவரின் பெயரை தாங்கிய பட்டியில்
    இருந்து கிடைக்கவில்லையா?///// சிங்கள நாய்கள் கற்பழிக்கும் போது யார் பெயரை பார்ப்பார்கள்
  • Arun Josep அடுத்து ஒரு சிங்கள அமைச்சரும் சில போராளிகளை கற்பழித்ததாக ஆனந்த விகடன் எழுதுகிறது.அது உண்மை என்றால் அவரின் பெயரை வெளிக் கொணரவில்லை..ஏன்?..ஒரு போராளி 
    விபச்சாரி ஆன விடயத்தை மட்டும் வெளிக்கொணர்வதுதான் ஆனந்த விகடனின் சமூகப் பணியா? ஒரு நாட்டின் அமைச்சரே கற்
    பழிப்பு குற்றம் செய்திருந்தபோது அவரின் பெயரை வெளிப்படுத்தாமல் இருப்பது எந்தவிதத்தில் ஒரு சமூகப் பனி ஆகும்? இதை வெளிப்படுத்தியிருந்தால் இன்று இந்த விடயம் ஐக்கிய நாடுகள் சபையின் மணித் மனித உரிமை ஆணையத்தின் முன் அரங்கேறி இருக்குமே.? ஏன் செய்யவில்////அந்த அமைச்சரின் பெயர் மேர்வின் சில்வா என்று நினைக்கிறன்
  • Kabil Clasher @Arun josep, இதைப் பற்றி (அமைச்சரின் பெயர்) உங்களுக்கு எப்படி தெரியும் ....

ad

ad