புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 டிச., 2012

இந்தியா 105 ஓவரில் 316 ரன் குவித்து ஆல்அவுட் ஆனது.இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 216 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய இந்திய அணி நேற்றைய முதல்நாள் ஆட்ட நேர முடிவில்
7 விக்கெட் இழப்புக்கு 273 ரன் எடுத்து இருந்தது. தெண்டுல்கர் 76 ரன்னும், காம்பீர் 60 ரன்னும் எடுத்தனர். டோனி 22 ரன்னிலும், ஜாகீர்கான் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். 

இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து ஆடினார்கள். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஜாகீர்கான் 6 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த இஷாந்த் சர்மாவும் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். இந்த இருவரது விக்கெட்டையும் பனேசர் கைப்பற்றினார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 9 விக்கெட் இழப்புக்கு 296 ஆக இருந்தது. 

கடைசி விக்கெட்டுக்கு கேப்டன் டோனியுடன் ஒஜா ஜோடி சேர்ந்தார். இந்திய அணி 97.5 ஓவரில் 300 ரன்னை தொட்டது. டோனி சிறப்பாக ஆடி 50 ரன்னை தொட்டார். அவரது 28-வது அரை சதமாகும். இந்தியா 105 ஓவரில் 316 ரன் குவித்து ஆல்அவுட் ஆனது. டோனி 52 ரன்னில் கடைசியாக ஆட்டம் இழந்தார். பனேசர் 4 விக்கெட்டும், ஆண்டர்சன் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை விளையாடியது தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கூக்கும், காம்டனும் களம் இறங்கி நிதானமாக விளையாடினர். மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 22 ரன் சேர்த்தது. 

மதிய உணவு இடைவேளைக்குப்பிறகு இருவரும் தொடர்ந்து ஆடினார்கள். கேப்டன் கூக் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அவரைத்தொடர்ந்து காம்டனும் அரை சதம் அடித்தார். சிறிது நேரத்தில் காம்டன் 57 ரன் இருக்கும் போது ஓஜா பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். 

அடுத்து வந்த டிராட், கேப்டன் கூக்குடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். கூக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 216 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கூக் 136 ரன்களுடனும், டிராட் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ad

ad