புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2012


இங்கிலாந்து அணி 2-வது டெஸ்டிலும், 3-வது டெஸ்டிலும் வெற்றி பெற்றது. இந்தியா முதல் டெஸ்டில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் டிராவில் முடிந்ததால் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 330 ரன் எடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 326 ரன் எடுத்து `டிக்ளேர்' செய்தது.

4 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்றைய 4-வது நள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து இருந்தது. டிராட் 66 ரன்னும், இயன்பெல் 24 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று (திங்கட்கிழமை) 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் நிதானமாக விளையாடினர். இந்திய அணி எஞ்சிய விக்கெட்டுகளை எளிதில் கைப்பற்றி வெற்றி பெற்றுவிடலாம் என்ற ஆர்வத்துடன் இந்திய பவுலர்கள் பந்து வீசினார்கள். ஆனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் `டிரா' செய்யும் எண்ணத்துடன் பொறுப்புடன் ஆடினார்கள்.

டிராட் நிதானமாக விளையாடி சதம் அடித்தார். அவரைத்தொடர்ந்து பெல்லும் சதம் அடித்தார். நிதானமாக விளையாடி வந்த டிராட் 143 ரன் எடுத்திருந்த போது அஸ்வின் பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ரூட், பெல்லுடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். 135 வது ஓவரில் இங்கிலாந்து அணி 154 ரன் எடுத்திருந்த போது டிரா செய்வதாக அறிவித்தது.

இங்கிலாந்து அணி 2-வது டெஸ்டிலும், 3-வது டெஸ்டிலும் வெற்றி பெற்றது. இந்தியா முதல் டெஸ்டில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் டிராவில் முடிந்ததால் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அந்த அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.

இரு அணிகள் இடையேயான இரண்டு 20 ஓவர் போட்டியில் முதல் ஆட்டம் புனேயில் வருகிற 20-ந்தேதி நடக்கிறது.

ad

ad