புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2012


www.thedipaar.com

தலைநகர் டெல்லியில் 23 வயது துணை மருத்துவ மாணவி, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது நண்பருடன் பஸ்சில் பயணம் செய்தபோது, ஒரு கொடிய கும்பலால் கற்பழிக்கப்பட்டார்.
இந்தச்சம்பவம், நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டு விட்டனர். இருப்பினும் அவர்களை உடனே தூக்கில் போட வலியுறுத்தி போராட்டங்கள் வலுத்து வருகின்றன.Photos.Video

www.thedipaar.com
ஜனாதிபதி மாளிகை நோக்கி...
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் நேற்று தொடர்ந்து 2–வது நாளாக ஜனாதிபதி மாளிகை நோக்கி ஊர்வலமாக செல்ல ‘இந்தியா கேட்’ பகுதியில் காலை 9 மணியில் இருந்தே மாணவ, மாணவிகள் அலை, அலையாக திரண்டனர். அங்கு முன்னாள் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் வந்து, போராட்டக்காரர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
அவர்கள் மத்தியில் வி.கே.சிங் பேசுகையில், ‘‘நமது அரசு நிர்வாக முறையில் ஏற்பட்ட தோல்வியால்தான் இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன. கடந்த பல ஆண்டுகளாக போலீஸ் சீர்திருத்தம் நடைபெறவில்லை. இது தொடர்பாக அவர்கள் எதுவும் செய்யாதது ஏன்? என்னிடம் ஆள் பலம் இல்லை என்று ஒரு போலீஸ் கமிஷனர் கூறுவதை நாம் கேட்கிற நிலை ஏன் வந்தது? இது வெட்கக்கேடானது’’ என சாடினார்.
www.thedipaar.com

தடுத்து நிறுத்த முயற்சி
இந்தியா கேட் பகுதியிலிருந்து போராட்டக்காரர்கள் ராஜபாதை வழியாக ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம், நிதித்துறை மந்திரி அலுவலகம் அமைந்துள்ள ரைசினா ஹில்ஸ் பகுதிக்கு ஊர்வலமாக புறப்பட்டுச்சென்றனர். ரைசினா ஹில்ஸ் பகுதியில் ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம், ஆகியவற்றுக்கு செல்லக்கூடிய பிரதான வழிகள் அடைக்கப்பட்டிருந்தன. போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
 போராட்டக்காரர்கள் ரைசினா ஹில்ஸ் அருகே சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் தடுப்புவேலிகளை தகர்த்தெறிந்துவிட்டு புயல் வேகத்தில் ஜனாதிபதி மாளிகையை நோக்கி முன்னேறினர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். தடியடியும் நடத்தினர்.
www.thedipaar.com
வன்முறை வெடித்தது
போலீஸ் நடவடிக்கையால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் அங்கு நின்றிருந்த போலீஸ் வாகனத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கினர். ஒரு மாணவி, பஸ் ஜன்னல் கண்ணாடியை தனது கையினால் ஆவேசத்துடன் உடைத்து காயம் அடைந்தார். அந்தப் பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது.
 ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள ரைசினா ஹில்ஸ் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் சம்பவ இடத்திலேயே நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். போலீசாருக்கு எதிராகவும், டெல்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் எதிராக கோஷங்களை முழங்கினர்.
www.thedipaar.com

மோதல்
மதியம் சுமார் 12 மணியளவில், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த போலீசார் மறுபடியும் தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். ஆனால் அதற்கு அசைந்து கொடுக்காத போராட்டக்காரர்கள், போலீசாருடனும், அதிரடிப்படை கமாண்டோக்களுடனும் மோதினார்கள். இந்த மோதலில் 10 மாணவர்கள் காயம் அடைந்தனர். மற்றொரு போலீஸ் வேன் தாக்குதலுக்கு உள்ளானது. நிலைமை கைமீறிச்சென்றதால் போராட்டக்காரர்கள் சிலரை போலீசார் பிடித்துச்சென்றனர்.
மந்திரி வேண்டுகோள்
இதற்கிடையே போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்க வேண்டாம் என்று மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி ஆர்.பி.என்.சிங் கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் பேசும்போது, ‘‘இந்த வழக்கில் குற்றவாளிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாராளுமன்றத்தில் மட்டுமல்லாது, வெளியேயும் வாக்குறுதி அளித்திருக்கிறோம். போலீசாரின் தடுப்பு வேலியை மாணவர்களும், மாணவிகளும் உடைத்தெறிவது பிரச்சினைக்கு தீர்வு காண உதவாது. பேச்சு வார்த்தைக்கு அரசு தயாராக இருக்கிறது’’ என்று கூறினார்.
www.thedipaar.com
மாணவிகளை தூக்கிச்சென்றனர்
சம்பவ இடத்தில், வன்முறையில் இறங்கிய போராட்டக்காரர்களை கட்டுக்குள் கொண்டு வர மீண்டும் போலீஸ் குவிக்கப்பட்டது. மாணவிகளை பெண் போலீசார் தூக்கிச் சென்றனர். மீண்டும் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர். பல மணி நேரம் மாணவர்கள் அங்கு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அலை, அலையாக வந்து குவிந்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் மொத்தம் 7 முறை தடியடி நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் 30 மாணவர்கள் காயம் அடைந்ததாகவும், அவர்கள் 3 மருத்துவமனைகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஒரு கட்டத்தில் போலீசாரை மாணவர்கள் கல்வீசி தாக்கினர்.
போலீசாருடன் மோதல்
மாலையில் போராட்டம் வலுத்தது. பாராளுமன்ற கட்டிடத்தின் அதிமுக்கிய பிரமுகர்கள் வாயிலில் ஒரு பஸ்சில் போலீசார் ஏறிக்கொண்டிருந்தனர். அவர்களை போராட்டக்காரர்கள் சுற்றி வளைக்க முயற்சித்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்களை பலப்பிரயோகம் செய்து போலீசார் விரட்டினர். பதிலுக்கு போராட்டக்காரர்கள், போலீசார் மீது தண்ணீர் பாட்டில்களை, பூந்தொட்டிகளை வீசினர். பஸ், ஆம்புலன்ஸ் ஆகியவையும் தாக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் அமைதி காக்குமாறு பல முறை போலீசார் ஒலிபெருக்கி வாயிலாக வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தனர்.
இரவு வரை நீடித்தது
 இந்தியா கேட்டிலிருந்து விஜய் சவுக் வரையிலான 4 கி.மீ. தொலைவிலும் மாணவ, மாணவிகள் தான் திரண்டிருந்தனர். இந்தியா கேட் பகுதியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இரவு வரை போராட்டம் நீடித்தது. சுதந்திர இந்தியாவில், ஜனாதிபதி மாளிகை பகுதியில் இப்படியொரு போராட்டம் இதுவரை நடந்தது இல்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை போராட்ட பிரதிநிதிகள் குழு சந்தித்து மாணவி கற்பழிப்பில் விரைவான நீதி வழங்கக்கோரி ஒரு கோரிக்கை மனு அளித்தனர். போராட்டக்குழுவிலிருந்து 5 பெண்களை உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே பேச்சு வார்த்தைக்கு அழைத்திருப்பதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

ad

ad