புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2012


 
கிராண்ட்பாஸில் நடந்தது முக்கொலை?: மீட்கப்பட்ட கடிதத்தின் கையெழுத்து கணவன் மனைவியுடையது அல்ல!
கடந்த 26ம் திகதி கிராண்ட்பாஸ் பகுதியில் தாய், தந்தை மற்றும் இரண்டு வயது குழந்தை ஆகியோர் சடலங்களாக பொலிஸாரினால் மீட்கப்பட்டன.
இவ்வாறு மீட்கப்பட்ட அந்த சடலங்களுக்கு அருகில் இருந்த தமிழில் எழுதப்பட்ட கடிதமொன்றையும் பொலிஸார் மீட்டனர். அந்த கடிதத்திலிருந்த கையெழுத்தானது உயிரிழந்த கணவன் மனைவி ஆகிய இருவருடையதும் அல்லவென உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த கடிதத்தினை உயிரிழந்துள்ள கோகிலவாணி எழுதியிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர். ஆனால் அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்தானது கோகிலவாணியுடையதும் அவருடைய கணவரான சிறிகாந்தனுடையதும் அல்லவென இரு வீட்டாரும் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறிகாந்தனது சகோதரர் ஒருவர் இது தொடர்பில் எமக்கு தெரிவிக்கையில்,
தனது சகோதரர் ஆங்கில மொழியிலேயே அதிகமாக பரீட்சயம் உள்ளவரெனவும் தமிழில் பெரிதாக எழுத அவரால் முடியாது எனவும் தெரிவித்தார். அத்தோடு அக்கடிதத்தில் உள்ள கையெழுத்தானது சகோதரனின் மனைவியுடையதும் அல்லவெனவும் தெரிவித்தார்.
இது குறித்து கொட்டாஞ்சேனை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஹேமந்த ஓவிட்டிகம தெரிவிக்கையில், 
மீட்கப்பட்ட மூன்று சடலங்களுக்கு அருகில் இருந்து பெறப்பட்ட கடிதத்தில் உள்ள கையெழுத்தானது உயிரிழந்துள்ள சிறிகாந்தன் மற்றும் அவரது மனைவி கோகிலவாணி ஆகிய இருவருடையதும் அல்லவென அவர்கள் கருதினால் அது தொடர்பாக எமக்கு முறைப்பாடு செய்யலாம்.
இவ்வாறு முறைப்பாடு செய்யும் பட்சத்தில் அம்முறைப்பாட்டின் அடிப்படையில் நாம் விசாரணைகளை முன்னெடுப்போம். அத்தோடு சடலங்களுக்கு அருகில் இருந்து எடுக்கப்பட்ட கடிதத்தினையும் உயிரிழந்துள்ள கணவன் - மனைவி ஆகியோரது கையெழுத்துக்கள் அடங்கிய ஏனைய ஆவணங்கள் சிலவற்றையும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பிவைத்தால் அது பற்றிய சரியான தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

ad

ad