புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 டிச., 2012




           26-ந் தேதியின் பிற்பகல் பொழுது. 

நெல்லை 2-வது கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி நந்தகுமார், குற்றவாளிக் கூண்டில் நின்ற காட்டுராஜாவையும் வெட்டும்பெருமாளையும் ஒருமுறை பார்வையால் அளந்தார்.

பின்னர் "நீங்கள் இரு வரும் செய்த குற்றத்திற்குத் தண்டனை விதிக்கப்பட இருக்கிறது. நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?' என்றார்.

உடல் ஒடுங்கிப்போன அந்த இருவரும் ""அய்யா, குறைந்தபட்ச தண்டனையைக் கொடுங்கய்யா'' என்றனர் மெல்லிய குரலில் கை கூப்பியவாறு.

இதன் பிறகுதான் அந்த வரலாற்று முக்கியம் வாய்ந்த தீர்ப்பை வாசித்தார் நீதிபதி.

""கணவன், மனைவி, இரண்டு பிள்ளைகள் என 4 பேரை கொடூரமாகக் கொலை செய்த குற்றம் சந்தேகமற நிரூபணம் ஆகியிருக்கிறது. எனவே குற்றவாளிகள் 2 பேருக்கும் தலா 4 தூக்குத் தண்டனைகளையும் உடன் இணைந்த குற்றங்களுக்காக தலா 5 ஆயுள் தண்டனை களையும் விதிக்கிறேன்'' என்றார் அழுத்தமாக. தீர்ப்பைக் கேட்ட குற்றவாளி கள் இருவரும் உடல்நடுங்க தலைகவிழ்ந்தார்கள். இந் தத் தீர்ப்பு, நெல்லை மாவட்ட மக்கள் மத்தியில் சந்தோஷப் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. .

காட்டுராஜாவும் வெட்டும்பெருமாளும் அப்படி என்ன கொடூரத் தை அரங்கேற்றினார்கள்?


நெல்லை மாவட் டம், களக்காடு அருகே இருக்கும் மலைப்பகுதி யான மீனவன்குளத்தில் கேரளக்காரர் ஒருவருக்கு சொந்தமான பண்ணைத் தோட்டம் இருக்கிறது. அங்கு மனைவி சண்முகத் தாய் மற்றும் பிள்ளை களோடு தங்கி, பண்ணைப் பராமரிப்பு வேலையைப் பார்த்து வந்தார் ஜெயக் குமார்.

ஊருக்கு ஒதுக்குப் புறம் என்பதால் வீட்டிற் குத் தேவையான பொருட்களை வாங்க, பக்கத்தில் ஓடும் கால்வாயைக் கடந்துதான் பண்ணைக்கு வரவேண்டும்.

இந்த நிலையில் ஜெயக்குமாருக் கும் காட்டு வேலைக்காக வரும் காட்டுராஜாவின் மனைவி சுப்புலட் சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது நெருக்கமாகி இருக்கிறது. இதையறிந்த காட்டுராஜா அவர்களைக் கண்டித்தும், பழக்கம் தொடர்ந்திருக்கிறது. இதனால் வெறியானார் காட்டுராஜா. தனது மைத்துனன் வெட்டும்பெருமாளிடம் விஷயத்தைச் சொல்லி அவரையும் துணைக்குச் சேர்த்துக் கொண்ட காட்டுராஜா, கடந்த 19.4.2007 அன்று மாலை, கால்வாயைக் கடந்து வழக்கமாக டீ வாங்க வரும் ஜெயக் குமாருக்காகக் காத்திருந்தார். இதன் பிறகுதான் அந்தக் கொடூரங்கள் அரங்கேறின.

காத்திருக்கும் விபரீதத்தை உணராத ஜெயக்குமார்,  டீ வாங்கிக் கொண்டு தன் சைக்கிளில் பண்ணை வீட்டுப்பக்கம் போக, அவரைப் பின்தொடர்ந்து வந்த காட்டுராஜாவும், வெட்டும் பெருமாளும், ஜெயக்குமாரின் சைக்கிளை ஒரே மிதியில் கீழே தள்ளினர். தடுமாறி விழுந்த ஜெயக்குமாரை விரட்டிச் சென்று படுகொடூரமாக வெட்டிப் பொலி போட்டனர்.  அப்போது தன் கணவனின் மரணக் கூச்சலைக் கேட்டு வீட்டுக்கு வெளியே ஓடிவந்த ஜெயக்குமாரின் மனைவி சண்முகத்தாய், அந்தக் கொலை பாதகர்களின் கண்களில் பட்ட நேரத்தில், ஜெயக்குமாரின் குழந்தைகளான இந்திராவும் புவுனேஸ்வரியும் தந்தை துடிப்பதைப் பார்த்து அலறினார்கள். 

’சாட்சியா யாரையும் உயிரோடு விட்டு வைக்கக் கூடாது’என்றபடி அரிவாளோடு நெருங்கும் கொலைகாரர் களிடமிருந்து தப்பிக்க, சண்முகத்தாய் மொட்டை மாடி பக்கம் ஓட, துரத்திச் சென்றவர்கள் அவரை அரிவாளுக்கு இரையாக்கினார்கள்.

அடுத்து அவர்கள் கவனம், உலகமறியா அந்தப் பிஞ்சுக்குழந்தைகள் பக்கம் திரும்பியது. மிரண்டு ஓடிய குழந்தைகள் இருவரும் வீட்டுக்குள் ஓடி, கதவை உட்பக்கமாகத் தாழிட்டுக்கொள்ள, பக்கத்தில் கிடந்த கடப்பாறையால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர் கொலைவெறியர்கள். கட்டிலுக்கடியில் உயிர் பயத்தில் கோழிக்குஞ்சுகளாய் வெடவெடத்துக் கொண்டிருந்த இந்திராவையும் புவனேஸ்வரியையும் வெளியே இழுத்தவர்கள், இரக்கம் காட்டாமல் கதறக் கதற அவர்களை அரிவாள்களால் கூறு போட்டுவிட்டு, அவர்கள் தரையில் விழுந்து துடித்துக்கொண்டிருக்கும்போது, நிதானமாக வெளியேறினர். காட்டுப் புறப்பகுதி என்பதால் நடந்த இந்த நான்கு கொலைகளும் மறுநாள் காலையில்தான் தெரியவர, விசாரணையை மேற்கொண்டது களக்காடு போலீஸ்.

கடந்த 5 வருடங்களாக நடந்த இந்த வழக்கின் விசாரணைக்குப் பின்பு குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கொடூரக் குற்றவாளிகளான காட்டுராஜாவுக்கும் வெட்டும்பெரு மாளுக்கும் கடுமையான தண்டனையை வழங்கியிருக்      கிறார் நீதிபதி நந்தகுமார்.

குற்றவாளி யார் என்கிற விபரமே தெரியாமலிருந்த நேரத்தில், காட்டுராஜா மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். காரணம், சம்பவத்தன்று இவர்கள் இரண்டுபேரும் அரிவாளோடு நின்றிருந்ததை ஒருவர் பார்த்திருக்கிறார். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு, சட்டை மற்றும் அரிவாள்களில் ரத்தக்கறையோடு வந்தவர்களை மறுபடியும் பார்த்த அந்த நபர், "என்ன ஒரே ரத்தமாயிருக்கு?' என்று கேட்டிருக்கிறார்

"ஆட்டை வெட்டினோம்'’என பதற்ற மாய் சொன்னவர்கள், இனி தப்ப முடி யாது என்ற முடிவுக்குவர, இதன் அடிப் படையிலேயே சரண் படலம் நடந் திருக்கிறது.

சாட்சிகள் மற்றும் சந்தர்ப்ப சூழல் கள் இவைகளால் குற்றம் நிரூபிக்கப்பட்டி ருப்பதால்தான் 4 கொலைகளுக்கு குற்ற வாளிகள் 2 பேருக்கும் நான்கு தூக்குத் தண்டனையும் உடன் இணைந்த குற்றங் களுக்காக 5 ஆயுள் தண்டனைகளும் மேலும் 2 லட்சத்து 25 ஆயிரம் அபராத மும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறார் நீதிபதி.

காட்டுராஜாவுக்கு, ஜெயக்குமா ருடன்தான் மோட்டிவே தவிர, அவரது மனைவியும் பிள்ளைகளும் என்ன செய்தார் கள்? தனியே இருந்த பெண்ணை வன்கொலை செய்ததோடு நிராதரவான, பழிபாவம் அறியாத, குழந்தைகளை கொடூ ரமாக வெறித்தனமாகக் கொலை செய் திருக்கிறார்கள். நிர்க்கதியான பெண்ணுக் கும், ஆதரவில்லாத குழந்தைகளுக்கும் எதிராக நடத்தப்பட்ட வன்படுகொலை களுக்காக தரப்பட்ட இந்தத் தீர்ப்பு, இந்திய குற்றவியல் வரலாற்றில் இதுவரை தரப்படாத அதிரடித் தீர்ப்பாகும்'' என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.

""இது ஒரு லேண்ட்மார்க் ஜட்ஜ் மெண்ட்''’என்கிறார் இந்த வழக்கில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞரான ராஜபிரபாகரன்.

ஈரமற்ற இதயமுள்ள குற்றவாளி களுக்கு இந்தத் தீர்ப்பு, ஒரு பலமான கடிவாள

ad

ad