புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2012

சர்வதேச கால்பந்து சம்மேளன விருதுக்கு 3 பேர் போட்டி
இதன்படி இந்த ஆண்டுக்கான விருதுக்கு போட்டியில் மொத்தம் 23 பேர் இருந்தனர். அதில் இருந்து 3 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வாகி உள்ளனர். 
சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஆண்டுதோறும் உலகின் சிறந்த வீரரை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 
 
 
அதாவது அர்ஜென்டினா கேப்டன் லயனல் மெஸ்சி, போர்த்துக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ, ஸ்பெயின் முன்னணி வீரர் ஆண்ட்ரஸ் இனியஸ்டா ஆகிய மூன்று பேர் மட்டும் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் சிறந்த வீரர் விருதுக்கான இறுதி களத்தில் உள்ளனர். 
 
எனினும் இவர்கள் இருவரில் ஒருவருக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படவுள்ளது.
 
சர்வதேச அணிகளின் பயிற்சியாளர்கள், கேப்டன்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் வாக்களித்து சிறந்த வீரரை தேர்ந்தெடுப்பார்கள். 
 
விருதுக்குரியவர் யார் என்பது ஜனவரி 7ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் அறிவிக்கப்படும். 
 
இருப்பினும் இந்த விருது மெஸ்சிக்கே கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
பார்சிலோனா கிளப்புக்காக விளையாடி வரும் 25 வயதான மெஸ்சி ஏற்கனவே மூன்று முறை இந்த விருதினை பெற்றுள்ளார். 
 
எனவே இந்த முறையும் தேர்வானால், 4 தடவை இந்த விருதை பெற்ற முதல் வீரர் என்ற சிறப்பை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad