புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2012

சுவிஸில் நெடுஞ்சாலை கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணையை பாராளுமன்றம் நிராகரித்தத

40பிறங்கிலிருந்து 100பிறாங்காக அதிகரிக்க வேண்டும் என்ற செனட் சபையின் தீர்மானத்தை சுவிஸ் தேசிய நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது. 40பிறாங்கையே தொடர்ந்து அறவிடவேண்டும் என கீழ்சபையான நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.


இதற்கான விவாதமும் வாக்கெடுப்பும் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த தீர்மானத்தை நிராகரிப்பதற்கு ஆதரவாக 98வாக்குகளும் எதிராக 72வாக்குகளும் அளிக்கப்பட்டன. 10பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
மேல்சபையான செனட்சபை இத்தீர்மானத்தை அங்கீகரித்திருந்த போதிலும் கீழ்சபையான பாராளுமன்றம் அதனை நிராகரித்திருப்பதால் அதனை நடைமுறைப்படுத்த முடியாது. சோசலிசக்கட்சி(SP) மற்றும் கிறீன் எனப்படும் பசுமைக்கட்சி ஆகியன கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என கோரியிருந்தன.  நூறு பிறாங்காக இக்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் வருடம் ஒன்றிற்கு 275மில்லியன் பிறாங்கை வருமானமாக பெற்றிருக்க முடியும் என்றும் ஆனால் 40பிறாங்காக கட்டணத்தை வைத்திருந்தால் 150மில்லியன் பிறங்கை மட்டுமே வருமானமாக பெற முடியும் என போக்குவரத்து அமைச்சர் டொரிஸ் லெதார்ட் தெரிவித்திருந்தார்.
சுவிஸ் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்களுக்கு அறவிடும் வருடாந்த கட்டணத்தை
எனினும் வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி8சுவ
2015ஆம் ஆண்டுக்கு முதல் வீதி அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கு இந்நிதி தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
சுவிஸின் அயல்நாடுகளான இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்கள் தினசரி கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆனால் சுவிஸில் வருடாந்த கட்டணமே அறவிடப்படுகிறது. இதேவேளை குறுகிய காலம் சுவிஸில் தங்கியிருப்பவர்களுக்கு 2மாதத்திற்கு 40 பிறங்க அறவிடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

ad

ad