புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 டிச., 2012

“உங்கள் தலைவர்களையெல்லாம் கொன்று விட்டோம், நீங்கள் இப்போது எமது அடிமைகள்”
சிறிலங்காவில் போரில் உயிர்தப்பியவர்களுடன் மேற்கொண்ட செவ்விகளின் அடிப்படையில் பிபிசியின் முன்னாள் ஊடகவியலாளர் பிரான்செஸ் ஹரிசன் எழுதியுள்ள ஒரு நூலில், இரத்தம் தோய்ந்த போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.


2009ம் ஆண்டில் 5 மாத இடைவெளிக்குள் பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் சிறிலங்காவின் வடகிழக்குப் பகுதியில் கொல்லப்பட்டபோது உலகம் கண்களை மூடிக்கொண்டிருந்ததாக, பிரான்செஸ் ஹரிசனின் “மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன” நூல், கூறுகிறது.

விடுதலைப் புலிகளை இறுதியாக அழித்த போரில், 40 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாக, பின்னர் ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை, நடுங்க வைக்கும் எண்ணிக்கை என்று 259 பக்கங்களைக் கொண்ட இந்த நூல், குறிப்பிடுகிறது.

ஆனால், கொல்லப்பட்டவர்களின் இறுதியான கணக்கு அதைவிட மிக அதிகம் என்பதற்கான அறிகுறிகள் உள்ளதாக ஹரிசன் கூறுகிறார்.

பிரான்செஸ் ஹரிசன் கொழும்பில் பணியாற்றியபோது, விடுதலைப் புலிகளும், சிறிலங்கா அரசாங்கமும் அமைதி முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் அது முறிந்து போனது.

சிறிலங்காவில் நான்கு பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போரில் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிக்கை கூறுகிறது.

“இந்த எண்ணிக்கை 1990களில் இடம்பெற்ற யூகோஸ்லாவிய போர்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு சமமானதாகும்.”

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த சிறிலங்கா இராணுவத்தின் நடவடிக்கைகளின் போது, ஏற்படுத்தப்பட்ட அழிவுகள் மரணங்கள் தொடர்பாக சில தமிழ் ஆண்கள் மற்றும் பெண்களிடம் – பெரும்பாலும் பொதுமக்களின் சாட்சியங்களை ஹரிசனின் நூல், பதிவு செய்துள்ளது.

“தோற்டிக்கப்பட்டவர்களின் பார்வையில் வெற்றியை இது பதிவு செய்துள்ளது” என்று அவர் கூறுகிறார்.

“ஆம், இந்த நூலில் கருத்துகளைப் பதிவு செய்துள்ள சிலர் தீவிரவாதிகள், அல்லது அவர்களின் அனுதாபிகள், ஆனால் எல்லாமே அவ்வாறானதல்ல”

2009 மே மாதம் முடிவுக்கு வந்த போரில் உயிர் தப்பியவர்கள், இப்போது மேற்கு நாடுகளில் சிதறிப் போயுள்ளனர் என்கிறது இந்த நூல்.

“அழுகிய சதைகளின் துர்நாற்றம், எரியும் ரயர்களின் புகையும், வெடிமருந்துப் புகையும் கலந்த நெடி, என்பன மனித அச்சத்தின் உச்சமாக இருந்தன”

இதிலிருந்து உயிர்தப்பிய பொதுமக்கள் எவ்வாறு அருகில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாமில் சரணடைந்தார்கள் என்பதை ஹரிசன் மீள நினைவு கூருகிறார்.

“அவர்கள் மனிதகுருதிக் கறைகள் படிந்த நரகத்தில் இருந்து, கரையோர வீதி வழியாக நீண்டவரிசையாக இராணுவ முகாம் நோக்கிச் சென்றார்கள்.

அவர்களைச் சுற்றி நெருப்பு இன்னமும் எரிந்து கொண்டிருந்தது.

கால்களற்ற, சிதைந்துபோன சடலங்கள் வாகனங்களுக்குக் கீழ் அல்லது பதுங்குகுழிகளுக்குள் கிடந்தன.”

தனது பயணத்தில் ஆயிரக்கணக்கானவர்களின் மரணத்தைக் கண்டதாக ஒரு மதகுரு கூறுகிறார்.

“அவர்கள் விடுதலைப் புலிகள் அல்ல, பெரும்பாலானவர்கள் பொதுமக்கள்.”

உயிர் தப்பியவர்கள் அதிர்ச்சியோடு சிறிலங்கா இராணுவ முகாமை அடைந்தபோது,“உங்கள் தலைவர்களையெல்லாம் நாம் கொன்று விட்டோம், நீங்கள் இப்போது எமது அடிமைகள்” என்று ஒரு சிங்களப் படைவீரன் கேலி செய்தான்.

அந்த நூல் மேலும் சொல்கிறது: “ போர் வலயத்தில் இருந்து உயிர்தப்பியவர்கள் வெளியேறிய பின்னர், நிர்வாணமான நிலையில் நூற்றுக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்களின் உடல்கள் நிலத்தில் கிடத்தப்பட்டிருந்ததை, மின்பிறப்பாக்கிகளின் விளக்குகளால் வெளிச்சமூட்டப்பட்டிருந்த அந்த இரவில் அவர்கள் கண்டார்கள்.

வெற்றிபெற்ற சிறிலங்கா படைவீரர்கள் தமது கைபேசிகளின் மூலம் இறந்த போராளிகளைப் படமெடுத்துக் கொண்டனர்.

விடுதலைப் புலிகள் இறுதிக்கட்டத்தை அடைய முன்னர், போர் வலயத்தில் மருத்து தட்டுப்பாடு இருந்தது.

அதனால், மயக்கமருந்து கொடுக்கப்படாமலேயே உடல் உறுப்புகள் அகற்றப்பட்டன. அதைப் பார்த்தே, நோயாளிகள் பாதி மரணத்தை சந்தித்தார்கள்.

தீவிரவாதத்தை கையாள்வதில் சிறிலங்காவின் அணுகுமுறை பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் இடையில் வேறுபாடு காட்டப்படாமை, ஊடகங்களை இருட்டடிப்பு செய்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இடம்பெற்றதாக கூறுகிறார் ஹரிசன்.

போர் உச்சத்தில் இருந்தபோது, சீனா, ரஸ்யா, இந்திய, ஈரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கொழும்புக்கு ஆதரவாக நின்றன.

இன்று அதே நாடுகள், போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து சிறிலங்காவைப் பாதுகாக்கின்றன என்றும் அவர் கூறுகிறார்.

ஹரிசன் விடுதலைப் புலிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் கூட விமர்சித்துள்ளார்.

தமிழர்கள் தரப்பில், போராளிகளை கேள்விக்கிடமின்றி ஆதரவளிப்பது குறித்து நேர்மையான முறையில் மறுசிந்தனை செய்ய வேண்டிய தேவையுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

பயங்கரத்தை வெளிக்காட்டுவதற்காகவும், உலகத்தின் தலையீட்டுக்காகவும், போரின் இறுதிக்கட்டத்தில் அப்பாவிப் பொதுமக்களின் நகர்வுகளை விடுதலைப் புலிகளின் தலைமை கட்டுப்படுத்தியதை இழிவான செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆங்கில வழிமூலம் – IANS

ad

ad