புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 டிச., 2012

சென்னையில் பஸ் மீது லாரி மோதல்: 4 மாணவர்கள் பலி: தந்தை இறந்த நாளில் மகனும் உயிரிழப்பு  photos
திருப்போரூரில் இருந்து தி.நகருக்கு தடம் எண். 519 மாநகர பஸ் 10,12,2012 திங்கள்கிழமை காலை புறப்பட்டு சென்றது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் ஏராளமானோர் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். பஸ்சுக்கு இடது புறம் டாரஸ் லாரி ஒன்று வேகமாக சென்றது.
பெருங்குடி பகுதியில் பஸ்சும் லாரியும் நேராக சென்று கொண்டிருந்தபோது திடீரென்று லாரி இடது புறசாலையில் திரும்பியது. அப்போது லாரியின் பின்புற பகுதி பஸ் படிக்கட்டில் வேகமாக மோதியது. இதனால் பஸ் படிக்கட்டு நொறுங்கியது. அதில் தொங்கிக் கொண்டும் நின்ற படியும் பயணம் செய்த மாணவர்களும் பயணிகளும் படுகாயத்துடன் கீழே தூக்கி வீசப்பட்டனர். 

கீழே விழுந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மாணவர்கள் விஜயன், பால முருகன், மனோஜ்குமார், சேகர் ஆகிய 4 பேர் பரிதாபமாக இறந்தனர். 

இந்த விபத்தில் மேலும் 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்தில் பலியான பாலமுருகன், சேகர் இருவரும் பெருங்குடி அருகேயுள்ள சுனாமி நகரைச் சேர்ந்தவர்கள். விஜய், மனோஜ்குமார் இருவரும் துரைப் பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்தவர்கள். 

பலியான மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வரவழைக்கப்பட்டனர். மகன்களின் உடலை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள், உடன் படித்த மாணவ மாணவிகளும் மருத்துவமனையில் குவிந்தனர். மருத்துவனையே கண்ணீரால் நிரம்பியது. 

விபத்தில் பலியான விஜய்யின் பெரியப்பா மகன் கோபி கூறியதாவது, எங்கள் வீடு கண்ணகி நகரில் உள்ளது. விஜய் சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் +2 வகுப்பு படிக்கிறான். தினமும் பஸ்ஸில்தான் பள்ளிக்குச் சென்று வருவான். எப்போதுமே எங்கள் ஏரியாவுக்கு வரும் பஸ் மிக நெருக்கடியான கூட்டத்துடன்தான் வரும். பஸ் வசதி மிகவும் குறைவு. சென்ற வருடம் விஜய் தந்தை அடையாறு பஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த வருடன் விஜய் பஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளான். விஜய்க்கு இரண்டு தங்கைகள் உள்ளனர். அவரது தாயார் கூலி வேலை செய்து பிள்ளைகளை காப்பாற்றி வந்தார். இப்போது அந்த குடும்பத்துக்கு எப்படி எங்களால் ஆறுதல் கூற முடியும் என்றே தெரியவில்லை என்றார். 

ad

ad