புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2012

அரசுப் பேருந்து லாரி மோதியதில் 4 மாணவர்கள் பலியான சம்பவம்! தலைமறைவான லாரி டிரைவர் சிச்சினார்!
சென்னை அருகே திருப்போரூரில் இருந்து தி.நகருக்கு கடந்த 10-ந்தேதி காலை மாநகர பஸ் சென்றது. பெருங்குடி பஸ் நிறுத்தத்தில் ஆட்களை இறக்கிவிட்டு சென்றபோது சிமெண்ட் ஏற்றிய லாரி பின்னோக்கி வந்து படிக்கட்டில் மோதியது.

இதில் பஸ் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்த மாணவர்கள் விஜயன், மனோஜ்குமார், பாலமுருகன், சேகர் ஆகிய 4 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடி தலைமறைவானார். லாரியின் பதிவு எண் மூலம் அதன் உரிமையாளர் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சூலூர்பேட்டையை சேர்ந்த முரளி என்று தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லாரியை ஓட்டியது டிரைவர் ரமணய்யா (32) என்பது தெரிந்தது.

இந்த நிலையில் டிரைவர் ரமணய்யா ரெட்டேரி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை சுற்றிவளைத்து மடக்கி கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

ad

ad