புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2012

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை -5-4 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. 
ஆக்கி போட்டி கத்தார் தலைநகர் டோகாவில் நடந்தது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று முன்தினம் இரவு இறுதிப்போட்டியில் மோதின. தொடக்கத்தில் இருந்தே அனல் பறந்த
இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் மாறி மாறி கோல் போட்டுக் கொண்டே வந்தனர். 

59-வது நிமிடத்தின் போது இரு அணிகளும் 4-4 என்று சமநிலை எட்டியதால், உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது. இதைத் தொடர்ந்து 64-வது நிமிடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது இம்ரான், பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோலாக மாற்றினார். பதில் கோல் திருப்ப போராடிய இந்தியாவுக்கு 67-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பு வழங்க நடுவர் மறுத்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நமது வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

ஒரு கட்டத்தில் அதிருப்தியில் மைதானத்தை விட்டு வெளிநடப்பு செய்த இந்திய வீரர்கள் பிறகு சமாதானமாகி எஞ்சிய 3 நிமிடத்தையும் விளையாடி முடித்தனர். முடிவில் 5-4 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. முன்னதாக லீக்கில் இந்தியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.   

ad

ad