புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2012

தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 569 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 225 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 163 ரன்னில் சுருண்டது. 62 ரன்கள் முன்னி
லையில் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 230 ரன் எடுத்து இருந்தது.

கேப்டன் சுமித் 84 ரன் எடுத்தார். ஹசிம்அம்லா 99 ரன்னிலும், காலிஸ் 17 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து ஆடினார்கள். அம்லா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 87 பந்தில் 10 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார். 65-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 18-வது சதம் ஆகும்.

இந்த தொடரில் அம்லா அடித்த 2-வது செஞ்சூரி ஆகும். ஏற்கனவே பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் 104 ரன் எடுத்தார். மறுமுனையில் இருந்த காலிஸ் 37 ரன்னில் ஸ்டார்க் பந்தில் பெவிலியன் திரும்பினார். மிகவும் சிறப்பாக விளையாடிய அம்லா இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 196 ரன்னில் ஆட்டம் இழந்தார். 221 பந்துகளில் 21 பவுண்டரியுன் அவர் இந்த ரன்னை எடுத்தார்.

அப்போது டிவில்லியர்ஸ் 87 ரன்னில் இருந்தார். அடுத்து வந்த எல்கர் ரன் எதுவும் எடுக்காமல் பெவுலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து வந்த டூ பிலிசிஸ், டிவில்லியர்சுடன் ஜோடி சேர்ந்தார். டிவில்லியர்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். டூ பிலிசிஸ் 27 ரன் எடுத்து அவுட் ஆனார்.

அடுத்து வந்த பீட்டரசன் ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற இதனால் தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 569 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

பின்னர் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன் எடுத்தது. தொடக்க வீரர்களான எட் கோவன் 9 ரன்களுடனும், வார்னர் 29 ரன்களுடனும் களதில் இருந்தனர்.

ad

ad