புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2012


மகனைக் கண்டித்த இந்திய தம்பதிக்கு சிறை: நார்வே கோர்ட் அதிரடி தீர்ப்பு
 

இந்த தம்பதியரின் 7 வயது மகன் சாய் ஸ்ரீராம் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்துவந்தான்.
நார்வேயில் வசித்து வருபவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சந்திரசேகர்–
அனுபமா தம்பதியர். சந்திரசேகர், டி.சி.எஸ். நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராகவும், அனுபமா இந்திய தூதரக அதிகாரியாகவும் பணியாற்றி வந்தனர்.


சாய் ஸ்ரீராம் பள்ளிக்கூட பஸ்சில் பயணம் செய்தபோது சிறுநீர் கழித்து விட்டதாக பள்ளிக்கூடத்திலிருந்து சந்திரசேகர் தம்பதியருக்கு புகார் போனது. மேலும், அவன் விதியை மீறி பள்ளிக்கூடத்தில் இருந்து விளையாட்டு பொம்மைகளை வீட்டுக்கு எடுத்துச் சென்றான். இந்தச் செயல்கள் தவறு எனக்கூறி பெற்றோர் கண்டித்தனர். மேலும் இப்படிப்பட்ட காரியங்களில் அவன் தொடர்ந்து ஈடுபட்டால், இந்தியாவுக்கு அனுப்பிவிடுவதாக கூறினர்.

ஆனால் இதுபற்றி சாய் ஸ்ரீராம், பள்ளிக்கூட ஆசிரியர்களிடம் தெரிவிக்க, அவர்கள் போலீசில் புகார் செய்தனர். உடனே போலீசாரும் சந்திரசேகர் தம்பதியர் மீது தண்டனைச்சட்டம் பிரிவு 219–ன் கீழ் (குழந்தைகளை மிரட்டி மோசமாக நடத்துதல், வன்முறை, பிற தவறான செயல்கள் புரிதல்) வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு 04.12.2012 அன்று ஆஸ்லோ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. சந்திரசேகர் தம்பதியர் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, சந்திரசேகர் தம்பதியர் தங்கள் மகனை அடித்து துன்புறுத்தியதுடன், சூடும் வைத்துள்ளனர். எனவே, இந்தக் குற்றத்திற்காக சந்திரசேகர் தம்பதியருக்கு ஓராண்டுக்கும் அதிகமாக சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் முறையிட்டார்.

இரு தரப்பு கருத்தையும் கேட்டறிந்த நீதிபதி தீர்ப்பு கூறினார். குற்றம் நிரூபிக்கப்பட்டதால், சந்திரசேகருக்கு 18 மாதமும், அவரது மனைவி அனுபமாவுக்கு 15 மாதமும் சிறைத்தண்டனை வழங்கினார்.

ad

ad