புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2012


வடக்கு , கிழக்கில் 89 ஆயிரம் விதவைகள் உள்ளனர்; புள்ளி விபரங்கள் தெரிவிப்பு
யுத்தத்திற்குப் பின்னர் வடக்குக் கிழக்கில் 89 ஆயிரம் விதவைகள் உள்ளனர் என புள்ளிவிபரத் தரவுகள் மூலம் அறியமுடிகின்றது என தேவைநாடும் மகளீர் அமைப்பின் செயற்றிட்ட இணைப்பாளர் ஆரணி பாலசிங்கம் தெரிவித்தார்.


யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பால்நிலை வன்முறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது அதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெற்ற யுத்தத்தினால் பலர் கணவனை இழந்த நிலையில் தமது வாழ்க்கையினைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதன்படி நிலமைகளில் வடக்கு மற்றும் கிழக்கில் 89 ஆயிரம் பெண்கள் தமது கணவனை இழந்து பொறுப்புக்களுடனும் சுமையுடனும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.

மேலும் பலர் கணவன் உயிரோடு இருக்கின்றாரா இல்லையா என்றே தெரியாது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தனித்து நின்று தமது தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.

இதில் இளவயதுத் திருமணம் மிகவும் முக்கிய பங்கினை வகிக்கின்றது. தொடர்ந்து யுத்தத்தில் உயிரிழந்தவர்கள், காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் என்ற ரீதியில் கணவனை இழந்த  விதவைகளே அதிகமானவர்களாக உள்ளனர்.

அத்துடன் இந்த நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது மிகவும் அருகிய நிலையிலேயே காணப்படுகின்றது. தனிய ஒரு இடத்திற்கு போன முடியாது. துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

தற்போது பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.  இது ஒவ்வாரு நாளும் ஆயிரக்கணக்கில் நடாத்தப்பட்டு வருகின்ற ஒன்றாகும்.

மேலும் எமது நாட்டில் 80 வீதமானவர்கள் இன்னொருவரது உதவியுடனேயே வாழவேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது. நாம் இதில் இருந்து விடுபட்டு எம்மால் தனித்து நின்று செய்படும் தன்மையினை வளரத்துக் கொள்ள வேண்டும் என்றார். 

ad

ad