புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2012


பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்னர், விலகி கொள்ளுமாறு இலங்கை ஜனாதிபதியை வற்புறுத்துமாறு கனேடிய சட்டத்தரணிகள் சங்கம், அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜோன் பேயார்ட்டிடன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
டிசம்பர் 21 ஆம் திகதி கனேடிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அரச சட்டத்தரணி ரொபர்ட் சீ. பிரவுண் வெளிவிவகார அமைச்சருக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

சட்டத்தரணிகள், நொத்தாரிசுகள், சட்ட மாணவர்கள், சட்ட கலாநிதிகள் என 37 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட கனேடிய சட்டத்தரணிகள் சங்கம்,  தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சட்டத்தின் சுயாதீன தன்மையை பாதுகாக்க பாடுபட்டு வரும் ஒரு அமைப்பாகும்.
இலங்கையின் பிரதம நீதியரசருக்கு எதிராக நியாயமான மற்றும் வினைத்திறனான சுயாதீனமாக விசாரணைகளை நடத்தாது, அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு,  அரசாங்கத்தின் பெருபான்மை உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற குழுவினால், பிரதம நீதியரசர் குற்றவாளியாக்கப்பட்டுள்ளார்.  அரசாங்கம் தனது பெருபான்மை பலத்தை பயன்படுத்தி, அவரை பதவியில் இருந்து விலக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனால் பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை இரத்துச் செய்து, இலங்கையில் சட்டத்தின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக, தற்போது அமுலில் உள்ள சட்டத்தில் மாற்றங்களை செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை கனேடிய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் எனவும்  சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
எது எப்படி இருந்த போதிலும் 2013 ஆம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாடு தொடர்பாகவும் கனடா ஏற்கனவே எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

ad

ad