புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2012




கனடாவின் ஒன்றாரியோ மாகாண சட்டமன்றத்திற்கான தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ளதாக நம்பப்படும் இவ்வேளையில் ஸ்காபுறோ கில்வூட் தேர்தல் தொகுதியின் கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளராக கென் கிருபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பத்து வருடங்களிற்காக மாகாண மத்திய கண்சவேட்டி கட்சிகளில் தொண்டாற்றி வரும் கென் கிருபா தொகுதிசார் கண்சவேட்டிவ் அமைப்புக்களில் பல பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் நண்பனும் கனடா தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் நிதித்துறையில் நீண்ட காலமாக சேவையாற்றியவரும், பிரபல வீடு விற்பனை முகவரும் காப்புறுதி ஆலோசகருமான திரு கென் கிருபா சிறந்த சமூக சேவையாளராவார்.
மேற்படி கில்வூட் தொகுதிக்கான கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் வேட்பாளரைத் தெரிவு செய்யும் உள்ளகத் தேர்தல் திங்கட்கிழமை 10ம் திகதி மாலை நடைபெற்றது. திரு கென் கிருபாவை எதிர்த்து போட்டியிட்ட கறுப்பினப் பெண்மணி ஒருவர் மிகக் குறைந்த வாக்குகளையே பெற்றிருந்தார்.
மேற்படி தொகுதியின் வேட்பாளராக திரு கென் கிருபா தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவரது நண்பர் மற்றும் பல கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தீவிரமான ஆதரவாளர்கள் ஆகியோர் முக்கிய பங்காற்றி. பல நாட்களாக உழைத்து வந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்கள் அறிய www.canadamirror.com

ad

ad