புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 டிச., 2012



           ட்டுத் தடுமாறி, பஸ் ஸ்டாண்ட்டை நெருங்கிவிட்டார் அந்த இளம்பெண். ஆனால் அதற்குமேல் நடக்கவும் முடியவில்லை; நிற்கவும் முடியவில்லை. தரையில் சாய்ந்தார். 

மயங்கி விழுந்த அந்த இளம்பெண்ணைப் பார்த்ததுமே விருத்தாசலம் பஸ் ஸ்டாண்ட்டில் நின்றுகொண்டிருந்த அத்தனைபேருமே உதவிக்கு ஓடினர். தூக்கி உட்கார வைத்தனர். முகத்தில் தண்ணீர் அடித்து மயக்கத்தைப் போக்கினர். சூடாக டீ வாங்கிக் கொடுத்தனர். ""என்னம்மா பசியா...?'' இரக்கத்தோடு கேட்டனர்.

""இல்லை... இல்லை... மணிமுத்தாறு வடகரை படிக்கட்டில் உட்கார்ந்து பேசிக்கொண்டி ருந்தோம். அப்ப ஏழெட்டு பேர் குடிபோதையில் வந்தானுங்க. என் துப்பட்டாவால் அவரைக் கட்டிப் போட்டுவிட்டு, என்னைத் தூக்கிட்டுப்போய்... அதுல மூணு பேர்...'' -மேல பேச முடியாமல், இரண்டு கைகளாலும் தலையில் அடித்தபடி மீண்டும் மயங்கிச் சரிந்தார்.

கொஞ்சமும் தாமதிக்காமல் காவல்துறைக்கும், 108-க்கும் தகவல் கொடுத்தார்கள் பொதுமக்கள்.

24.12.12 இரவு 8 மணிக்கு நடந்தது இந்தச் சம்பவம். அந்த இளம்பெண், விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருப்பதை அறிந்த நாம் அங்கு விரைந்தோம். அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தோம். 

சுகந்தி வயது 23. ஊர் குணமங்கலம். தந்தை இறந்து விட்டார். சுகந்தியின் கூடப்பிறந்த அக்காவை மண்ணப்பாடி ராஜீவ்காந்திக்கு திருமணம் செய்திருந்தார்கள்.


அக்காவைப் பார்ப்பதற்காக அடிக்கடி மண்ணப்பாடி செல்லும் சுகந்தி, அக்காவின் கொழுந்தன் பாக்கியராஜிடம் (26) மனதைப் பறிகொடுத்தார். இருவரும் ஒரு வரையொருவர் விரும்புவதை, நெருங்கிப் பழகுவதை இரண்டு குடும்பத்தார்களும் கடுமையாக எதிர்த்தார்கள்.  

""அக்காளையும் தங்கையையும் அண்ணன்- தம்பிக்கு கொடுப்பதை நாங்கள் விரும்பவில்லை'' என்று காரணம் சொன்னார்கள். அதுவரை குடும்பத்தினருக்குத் தெரியப் பழகிய இருவரும், எதிர்ப்பிற்குப் பிறகு, மறைமுகமாகத் தங்கள் காதல் பயிரை வளர்க்கத் தொடங்கினர். 

""சாயந்தரம் 5 மணிக்கு விருத்தாசலம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்துடு, நானும் வர்றேன். நைட் 9 மணி பஸ்ல உன்னை ஏத்திவிட்டுடுறேன்'' -வாரம் இரண்டு மூன்று நாள் இப்படித்தான் சந்தித்துக்கொண்டார்கள்.

24.12.12 திங்கட்கிழமை 5 மணி. விருத்தாசலம் பஸ் ஸ்டாண்ட்டில் வந்து இறங்கினார் சுகந்தி. காத் திருந்த பாக்கியராஜ், சுகந்தியோடு மணிமுத்தாறின் வடகரைக்கு சென்றார். படிக்கட்டில் அமர்ந்தார் கள். 7 மணி வரை பேசிக்கொண்டிருந்தார்கள்.

""ரொம்ப நேரமாயிருச்சு... வா... வயக்காட்டுப் பக்கம் போயிட்டு, பஸ் ஸ்டாண்ட் போகலாம்'' எழுந்தார்கள். வழக்கம்போல வயல்காட்டுப் பக்கம் ஒதுங்கினார்கள்.

அப்போதுதான் அந்த குடிகாரக் கும்பல் வந்தது. பாக்கியராஜை தூக்கியெறிந்தார்கள். சுகந்தியை சூறையாடினார்கள். மூன்று பேருடன் போராடியது வரை சுகந்திக்கு நினைவில் நிற்கிறது. 

""நான் கண்ணு முழிச்சுப் பார்த்தப்ப அங்கே யாருமே இல்லைண்ணா...'' -நடந்ததை முழுவதை யும் திக்கித் திணறிச் சொல்லிவிட்டு முகத்தை மூடித் தேம்பினார் சுகந்தி. அதற்குள் டி.எஸ்.பி. வெங்கடேசனும், இன்ஸ்பெக்டர் சீராளனும் எஸ்.ஐ.திருமேனியும் வந்துவிட்டனர். அவர்களிட மும் நடந்ததைச் சொன்னார். விஷயம் விருத்தா சலத்தையும் தாண்டி, தீயாய்ப் பரவியது.

டில்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பலாத்காரம், தூத்துக்குடி தாதன்குளத்தில் வய துக்கே வராத 12 வயது சிறுமி பலாத்காரக் கொலை. இவைகளைத் தொடர்ந்து பற்றிப் படர்ந்த போராட்டங்கள். எல்லாம் சேர்ந்து கடலூர் மாவட்ட காவல்துறையை பரபரக்க வைத்துவிட்டது.

ஸ்பாட்டுக்கு வந்த எஸ்.பி. ராதிகா, வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணப்பன் ஆகியோர் தீவிரமானார்கள். முதலில் சுகந்தியின் காதலன் பாக்கியராஜை பிடித்துக்கொண்டு வந்தார்கள். ""நான் என்ன செய்வேன்? அவனுங்க 8 பேர். துப்பட்டாவால் என்னைக் கட்டிப் போட்டுவிட்டு, சுகந்தியைக் கெடுத்தார்கள்'' என்று தலையைக் குனிந்தான்.

மூன்றாம் நாளில், சுகந்தியைச் சீரழித்த கும்ப லில் 6 பேரை அள்ளிக்கொண்டு வந்தது போலீஸ்.

""ராமச்சந்திரன்பேட்டை முத்து, சுடலை, ராஜ சேகர், நாச்சியார்பேட்டை வெட்டு சங்கர், பழமலை நாதர் நகர் அமல்ராஜ், ஏழுமலை ஆகிய 6 பேரை கைது செய்து ரிமாண்ட் செய்திருக்கிறோம். இவர்கள் எல்லாரும் கிரிக்கெட் விளையாடுவதற்காக ஆற்றுக்கு வருபவர்கள். ஏமாந்தவர்கள், பயந்தவர்கள் மாட்டி னால் செல்போன் பறித்திருக்கிறார்கள். ஆபாசப் படங்களைத் தொடர்ந்து பார்த்திருக்கிறார்கள். கடலூர் வண்டிப்பாளையம் முருகனையும் பாண்டிச் சேரி சதீஷையும் தேடிக்கொண்டிருக்கிறோம். அவர் கள் பிடிபட்டால்தான் முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியும்'' என்கிறார் டி.எஸ்.பி.வெங்கடேசன்.

விருத்தாசலம் வழக் கறிஞர் பன்னீர்செல்வ மோ, ""படுகொலைகளும், கொள்ளைகளும் விருத் தாசலத்தில் சர்வசாதா ரணமாகிவிட்டது. புகார் களை வாங்கக்கூட காவல்நிலையத்தில் ஆளில்லை. சுகந்திக்கு ஏற்பட்டது போல எத்தனையோ சம்பவங்களை மூடி மறைத்து விட்டார்கள். 

தூங்கிவழியும் காவல்துறையைத் தட்டியெழுப்புவதற்காக மக்களைத் தயார் செய்து கொண்டிருக்கிறோம்'' என்கிறார்.

ad

ad