புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 டிச., 2012


புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக புதிய பட்டயப் படிப்பு!
புலம் பெயர்ந்த தமிழர்களுக்காக தனியாய புதிய பட்டயப் படிப்பு ஒன்றினைத் தொடங்கவுள்ளதாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


இன்று மதுரையில் சிங்கப்பூர் தமிழாசிரியர்கள் சங்கமும் மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய சிங்கப்பூர் தமிழாசிரியர்களுக்கான பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்துப் பேசினார் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ம.திருமலை.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம், இலங்கை உள்ளிட்ட இடங்களில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயரும் தமிழர்கள், தங்கள் முன்னோர்களின் கலாசாரம், பண்பாடு, மொழி ஆகியவை குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அவற்றின் அடிப்படையைக் கற்பிக்கும் வகையிலும் புதிய பட்டயப் படிப்பு அறிமுகப் படுத்தப்படும். இது குறித்து மத்திய பல்கலைக்கழக மானியக் குழு யு.ஜி.சி.யிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இது கிடைத்தவுடன் இந்தப் பட்டயப் படிப்பு அறிமுகப்படுத்தப்படும்.
தமிழ் இலக்கியங்கள் எக்காலத்துக்கும் பொருந்துவன. அவற்றில் நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் நல்ல தகவல்கள் உள்ளன. அவற்றை நம் வளரும் தலைமுறைக்குப் பயிற்றுவிக்க வேண்டும் என்றார்.

ad

ad