புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2012


எங்களை இங்கிருந்து சீக்கிரமாக அழைத்து சென்றுவிடுங்கள் பெற்றோரிடத்தில் குழந்தைகள் கண்ணீருடன் குமுறல்

 அம்மா அப்பா உங்களிடத்தில் இருந்து ஏன் எங்களை இவ்வாறு பிரித்து வைததிருக்கின்றனர் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது. உங்களோடு இருக்கவே எங்களுக்கு ஆவலாக இருக்கின்றது. நாங்கள் சீரழிக்கப்படுகிறோம் என்பதை எம்மால் உணர முடிகிறது. எங்களை சீக்கிரமாக இங்கிருந்து (நோர்வே குழந்தைகள் காப்பகம்) அழைத்து சென்று விடுங்கள் என நோர்வே சிறுவர் காப்பகங்களில் சிக்குண்டுள்ள விபரமறிந்த சிறுவர்கள் தமது பெற்றோரிடத்தில் கூறி கண்ணீர் வடிப்பதாக தெரியவந்துள்ளது. 


நமது உறவினர்களிடம் பேசுவதற்கு ஆசையாக உள்ளது. வருகின்ற நத்தார் தினத்திலாவது அவர்களுடன் பேசுவதற்கு இங்குள்ள அதிகாரிகளிடமிருந்து (குழந்தைகள் காப்பகத்திடமிருந்து) அனுமதியைப் பெற்றுத் தாருங்கள் என்றும் அந்த சிறுவர்கள் தமது தாய், தந்தையரிடத்தில் கெஞ்சலுடன் @காரிக்கை விடுத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

நோர்வே சிறுவர் காப்பகங்களில் பொறுப்@பற்கப்பட்டுள்ள வெளிநாட்டு சிறுவர்கள் தங்களது மனக் குமுறல்களையும் தமது பெற்றோரிடத்திலும் உறவினர்களிடத்திலும் உள்ள பாசத்øத வெளிப்படுத்த முடியாத வகையில் தவிர்த்துக் கொண்டிருப்பதாக பாதிக்கப்பட்ட தரப்பு பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

சிறுவர் காப்பகங்களால் பலவந்தமாக எடுத்து செல்லப்பட்டுள்ள குழந்தைகள் தாம் எதற்காக அங்கு வைக்கப்பட்டுள்ளோம் என்பதை அறியாதவர்களாகவே இருக்கின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு மூளை சலவை செய்யப்பட்டு தமது பெற்றோரின் மீது வெறுப்பைக் காட்டும் வகையில் குழந்தைகள் வழிநடத்தப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. அத்துடன் குழந்தைகளை பெற்றோர் சந்திக்கின்ற சந்தர்ப்பங்களில் காப்பகத்தின் அதிகாரிaகள் அருகிலேயே அமர்ந்திருப்பதால் குழந்தைகளிடத்தில் பெற்றோரும் பெற்றோரிடத்தில் மனம்திறந்து உறவாடக்கூடிய சூழல் மறுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையில்தான் குழந்தைகள் காப்பகம் தமது வாழ்க்கையை சீரழிப்பதாக விபரம் அறிந்த பிள்ளைகள் தமது பெற்றோரிடத்தில் தெரிவித்துள்ளனர். அத்துடன் பெற்றோரின் நடவடிக்கைகள் அநாகரிகமானவையென தொடர்ச்சியாக தம்மிடத்தில் காப்பக அதிகாரிகள் கூறி வருவதாகவும் அதேநேரம் காப்பகத்திலேயே இருப்பதற்கு விருப்பம் என பெற்றோரிடத்தில் கூற வேண்டும் எனவும் தாம் காப்பக அதிகாரிகளால் நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் குழந்தைகள் தமது பெற்றோருடனான சந்திப்பின்@பாது தெரிவித்துள்ளனர். மேலும் தாம் 18 வயது நிறைவடைந்ததன் பின்னரே பெற்றோரிடத்தில் சேர முடியும் என காப்பக அதிகாரிகள் தமக்கு கூறி வருவது வேதனையைத் தருவதாகவும் குழந்தைகள் தம்மிடத்தில் தெரிவித்ததாக பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

ad

ad