புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2012


தமிழீழமே ஈழத்தமிழர் தேசத்தின் இலக்கெனும் உறுதியுடன் நிறைவுகண்ட நா.தமிழீழ அரசாங்கத்தின் அமர்வு
பிரித்தானிய மண்ணில் இடம்பெற்று வந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது நேரடி பாராளுமன்ற அமர்வானது முக்கிய தீர்மானங்களுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்துள்ளது.
கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்று வந்த பாராளுமன்ற அமர்வு குறித்து நாடுகடந்த தமிழீழ் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையின் முழுவிபரம்:
ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க, உணர்வுகள் நிறைந்த அமர்வில் கடந்த நான்கு நாட்களாக பங்கு பற்றியிருக்கிறோம்.
இந் அமர்வினை நடைபெறாமல் தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகளையும் தாண்டி இந்த அமர்வு சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது. வெற்றியடைந்திருக்கிறது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் வளர்ச்சியினையும் எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதற்கு அமர்வின் வெற்றி கட்டியம் கூறுகிறது.
ஈழத்தமிழர் தேசத்தின் தமிழீழம் நோக்கிய செயற்பாடுகளை எவரும் முடக்க முடியாது என்பதனையும் சிறப்பாக நடைபெற்ற இந்த நேரடி அமர்வு பறைசாற்றுகிறது.
தமிழீழமே ஈழத் தமிழர் தேசத்தின் இலக்கு அந்த இலக்கு நோக்கிய பயணத்தை நாம் உறுதியுடன் தொடருவோம் என்பதை எதிரிக்கும் உலகத்துக்கும் முரசறைந்து கூறக்கூடிய வகையில் நமது நான்காவது அமர்வு நிகழ்கள் நடைபெற்று நிறைவேறியிருக்கின்றன.
நடைபெற்று நிறைவடையும் இந்த நான்காவது அமர்வு பல வகைகளில் சிறப்புடையதாக அமைந்திருக்கிறது.
இந் நிகழ்வில் இம்மானுவல் அடிகாளர் பங்கு கொண்டமை எமக்கும் மக்களுக்கும் மகிழ்வையும் நிறைவையும் தந்ததொரு சிறப்பாகும்.
தமிழர் அமைப்புக்குளிடையே புரிந்துணர்வும் ஒற்றுமையும் வலுப்பட வேண்டுமென்ற எமது மக்களின் விருப்புக்கு மதிப்பளிப்பதாக இது அமைந்திருக்கிறது. மக்களின் நம்பிக்கையினை வலுப்படுத்துவதாகவும் இது அமைகிறது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட வழிகாட்டிப்பாதை வரைபை சபை ஆழமாக விவாதித்தமையும் இவ் அமர்வின் மேலுமொரு சிறப்பான விடயமாகும்.
நாம் செல்லும் திசையைச் சரியாக வரையறுத்துக்கொள்ள வழிகாட்டிப்பாதை மிகவும் முக்கியமானதாகும்.
இந்த அமர்வில் சபை விவாதித்த இந்த வழிகாட்டிப்பாதை வரைவு இறுதியானதல்ல.
இதனை மேலும் செப்பனிட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழுவினதும் துறைசார் நிபுணர்களதும் ஆலோசனை பெறப்படும். இதன் இறுதிவரைபு தயார் செய்யுப்பட்டவுடன் சபையின் அங்கீகாரம் பெறப்பபட்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்.
இந்த அமர்வில்…
- தமிழீழ விடுதலைப் பட்டயம் (சாசனம்) ஒன்றினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பிரகடனப்படுத்துவது என்றும் சபை முடிவு செய்திருக்கிறது.
– ஈழத் தமிழர் தேசத்தின் மீது சிறிலங்கா அரசால் மேற்கொள்ளபட்ட போர் மற்றும் மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவற்றை விசாரணை செய்ய ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 99ம் பிரிவின்படி அனைத்துலக விசாரணைப் பொறிமுறையொன்றினை அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயத்திடம் கோரும் தீர்மானமொன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- தமிழீழப்பெண்களின் வாழ்நிலையினை உயர்த்தும் அனைத்துலக ஆண்டாக 2013 ஆம் ஆண்டினை சபை பிரகடனம் செய்துள்ளதுடன் புலம்பெயர்வாழ் தமிழ் மக்களின் பங்குபற்றலுடன் இவ் இலக்கை நோக்கிச் செயற்படுவதற்கும் சபை முடிவு செய்துள்ளது.
போரினால் வாழ்நிலை பாதிக்கப்பட்டள்ள எமது மக்களின் வாழ்வதாரங்களைக் கட்டி எழுப்புவதில் இம் முயற்சி ஒரு முக்கிய படிக்கல்லாக அமைத்திட வேண்டும்.
- பலஸ்தீனிய மக்கள் ஐக்கிய நாடுகள் சபையில் அவதானிப்பாளர் அந்தஸ்து கொண்ட அரசு என்ற தகைமையினை பெற்றுக் கொண்டமையினைப் பாராட்டி இச்சபை தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியிருக்கிறது.
உலகில் புதிதாய் உருவாகிவரும் பலஸ்தீன அரசுக்கு, தமக்கான அரசை உருவாக்கத் உறுதி பூண்டுள்ள ஈழத் தமிழர் தேசம் வெளிப்படுத்தும் தோழமையுணர்வாகத் இத் தீர்மானம் அமைந்துள்ளது.
- மியான்மாரின் ரொகிங்கா முஸ்லீம் மக்களுடன் தோழமையினை பகிரும் தீர்மானம் ஒன்றினையும் இச்சபை எடுத்துள்ளது.
உலகில் உள்ள ஒடுக்கபடும் தேசங்களுடன் நமது தோழமையையும் அன்பையும் வெளிப்படுத்தும் வகையில் இத் தீர்மானம் முக்கியம் பெறுகிறது.
கடந்த இரு வருட அனுபவங்களின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசசாங்கத்தின் அரசியலமைப்பில சில மாற்றங்களைச் இச்சபை மேற்கொண்டுள்ளது.
தாயகத்தில் சிங்களம் நமது மக்களின்மீதான ஒடுக்குமுறையினைத் தீவிரப்படுத்தி வருகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது இடம் பெற்ற தாக்குதலும், மாணவ தலைவர்களது கைதும் இந்த நீண்ட ஒடுக்குமறைப்பட்டியலின் பிந்தைய சேர்க்கைகள்.
நாளும் பொழுதும் நமது மக்கள் சிங்களத்தின் பிடியில் படும் இன்னல்களுக்கெல்லாம் தீர்வு சுதந்திரத் தனிநாடு ஒன்றாக மட்டுமே இருக்க முடியும்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் வலுப்nறுவது இந்தப்பயணத்தின் முக்கியமான படிமுறை. எமது திறமையான செயற்பாடுகள் தமிழீழ விடுதலையை விரைவுபடுத்தும்.
இதற்கான பயணத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு உறுதியுடன் செயற்படுவோமாக.
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்

ad

ad