புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2012


சிங்கத்தின் குகையிலேயே போராடும் புலி மறவர்கள்  விடுதலை ஆகட்டும் பிரார்த்திப்போம் 
(படத்தில் வலது கரையில் நெற்றியில் பொட்டு வைத்துள்ளவர்  தர்சனாந்த்) 
யாழ் பல்கலைகழக கலைபீட நான்காம் ஆண்டு மாணவன் தான் தர்சனாந்த் பரமலிங்கம் .இவர் தற்போது நீண்ட காலமாக பல்கலைக் கழக ஒன்றிய செயலாளராக இருந்து  தமிழுணர்வோடு எமது மண்ணுக்காகவும் மொழிக்காகவும் சிங்கத்தின் குகையிலேயே  சிங்கத்தோடு போரிட்டு வரும் அற்புதமான போராளி மாணவன் என்றே கூறலாம் . யாழ் புங்குடுதீவு மண்ணை பிறப்பிடமாக கொண்டவர் தஹ்ன் இந்த பரமலிங்கம் தர்சனாந்த். புங்குடுதீவு ஊரதீவு-கிழக்கூர் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் இவரது பெற்றோர் .தங்கள் புத்திரனை பல்கலைகழகத்துக்கு அனுப்பி பட்டம் பெற்று வருவார் என ஆவலோடு பார்த்திருக்கும் வேளையில் இவனது போராட்டகுணம் இனப்பற்று கண்டு ஒரு பக்கம் மகிழ்வடைந்தாலும் மறுபக்கம் பெற்ற உள்ளம் தவிக்கும் நிலை எங்களுக்கும்  புரியும். மிகத் திறமையான மாணவன், இவர்.க பொ (சா.தா.-உ.தர )பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர் . கடந்த முறையும் இவன் மீது இராணுவம் தனது வெறித்தனமான தாக்குதல்களை  மேற்கொண்டு பலத்த காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பி மீண்ட மறவன் .இந்த தடவை கைதாகி வவுனியாவில் சிறை வைக்கப் பட்டுள்ளான் இன்னும் 3 சக மாணவர்களுடன் . அங்கே கூட தாக்குதல்கள் சித்திரவதைகள் நடைபெறலாம்.இரா .சம்பந்தன்  மற்றும் பல்கலைகழக சமூகம்  எல்லாமே பேசி முடிந்து விட்டது .விடுதலை ஆகவில்லை .ஸ்ரீதரன் கூட பாராளுமன்றத்தில் இன்று இதனை  குறிபிட்டு பேசி உள்ளார் .தமிழகம் புலத்தில் எல்லாம் போராட புறப்பட்டு விட்டார்கள்.கடந்த முறை இவருக்கு ஏற்பட்ட காயம் கண்டு முகநூலில் கொஞ்சம் அடக்கி  வாசிங்கப்பா  முடிச்சுருவாங்க என்றேன் .அண்ணா அப்படி எல்லாம் பாக்க  முடியாது.எங்கள் மண்ணை மீட்கணும் என்றான், எனக்கே நெத்தி அடி .. எது எப்படியோ  எங்கள் மண்ணை சேர்ந்த இந்த மாணிக்கமும் சகாக்களும் நலமே விடுதலை ஆக இறைவனை பிரார்த்திப்போம் உறவுகளே 

ad

ad