புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2012



‘கைய்ய கால உடைச்சுடுவேன்’
-ராமதாஸ் கூட்டத்தில் பத்திரிக்கையாளருக்கு மிரட்டல்

 

 சேலம் எல்.ஆர்.என் ஹோட்டல் அரங்கத்தில் ராமதாஸ் தலைமையில் 'அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை' ஆலோசனை கூட்டம் நடந்தது.  இதில் பல்வேறு அமைப்பினரும் பங்கேற்க செய்தி சேகரிக்கவும்,புகைப்படம் எடுக்கவும் பத்திரிக்கையாளர்கள் சென்றனர்.

அப்பொழுது கூட்டம் முடியும் வரை செய்தியாளர்களுக்கு அனுமதி இல்லை புகைபடகாரர்களுக்கு மட்டும் புகைப்படம்  எடுக்க அனுமதிக்கிறோம் என்றனர்.


செய்தியாளர்களை கூட்டம் முடிந்ததும் தனியாக ப்ரெஸ் மீட் தந்து மருத்துவர் அய்யா சந்திக்கிறார் என்றனர் பா.ம.க வினர் .  இந்நிலையில் புகைப்படம் மட்டும் எடுக்க சென்ற தினசரி நாளிதழ் ஒன்றின் புகைப்பட கலைஞரை  தடுத்துள்ளனர். ஒரே ஒரு படம் எடுத்துவிட்டு வந்துவிடுகிறேன் அதற்கு அனுமதி உண்டு தானே என அவர் சொல்லும் போதே 'யோ படமெல்லாம் எடுக்க முடியாது' என கதவருகில் இருந்த மற்றொருவர் இவர் சட்டையை பிடித்து இழுத்து தள்ளிவிட்டார்.
ஒருமையில் பேச வேண்டாம் என பதில் தர இதை அறிந்து வாசலுக்கு வந்த மாநகர  செயலாளர் கதிர் ராசரத்தினம் 'தெரியாமல் பேசிவிட்டார் அவர் சார்பாக நான் மன்னிப்பு கேட்குறேன்' என்றார்.
அதனால் இதையடுத்து புகைப்பட கலைஞர் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து தள்ளி நின்றார்.  தனது செய்தியாளரிடம் இந்த தகவலை சொல்லிக்கொண்டு இருந்தார். இதை கண்ட அதே பா.ம.க பிரமுகர் 'டேய் இவன் அடங்கமாட்டான் போல ரூமுக்கு தூக்கிட்டு போங்கடா...  இவனுங்க  கைய்ய கால உடைச்சா தான் சரிபட்டு வருவானுங்க..   'என மிரட்ட பத்திரிக்கையாளர்களை நோக்கி கூட இருந்த நாலைந்து பா.ம.க வினர் திரண்டனர்.
உள்ளே ராமதாஸ் பேசிக்கொண்டு இருக்கும் சமயத்தில் தான் பத்திரிக்கையாளர்கள் கொலை மிரட்டலுக்கு உள்ளாகினர்.
 




மன்னிப்பு கேட்கும் பார்த்திபன்
பின் அணைத்து பத்திரிக்கையாளர்களும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவிக்க அந்த பா.ம.க பிரமுகரை மறைத்துவைத்தனர்  அங்கிருந்த மற்றவர்கள். சிலரோ 'அவங்க விடுதலை சிறுத்தைகள் எங்கள் கூட்டத்தை சிதைக்க வந்துவிட்டனர் ' என்றனர்.
கூட்டத்திற்கு வந்த அகில இந்திய தேசிய பார்வர்டு ப்ளாக் அமைப்பின் நிறுவன தலைவர் அரசகுமார் 'நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் இனி இதுபோல் நடக்காது' என பத்திரிக்கையாளர்களை சமாதானம் செய்தார்.
ஆனால் 'பத்திரிக்கையாளர்களை மிரட்டிய அவர் நேரில் வந்தால் மட்டுமே நாங்கள் கூட்டத்திற்கு செய்தி எடுக்க வருவோம் 'என ஒருமித்த குரலை பத்திரிக்கையாளர்கள் ஒலிக்க,   முன்னாள் ஓமலூர் எம்.எல்.ஏ தமிழரசு அந்த பிரமுகரை தேடி கண்டுபிடித்து பத்திரிக்கையாளர் முன் நிறுத்தினார்.
பத்திரிக்கையாளரை மிரட்டிய அந்த பிரமுகர் பெயர் பார்த்திபன்...'இனி இப்படி நடக்க மாட்டேன் மன்னிக்கவும்' என அவர் பத்திரிக்கையாளர் முன் கேட்டார்..பின்  மருத்துவர் ராமதாசும் 'நடந்தவைக்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன்' என கூற அதன் பின் பத்திரிக்கையாளர்கள் சமாதானம் அடைந்தனர்.


கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக இந்த பரபரப்பு நீண்டது.
- இளங்கோவன்

ad

ad